ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர். யூத பண்டிகையை கொண்டாடுவதற்காக கூடியிருந்த மக்கள் மீது ஆயுதமேந்திய தாக்குதல்காரர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) ஒரு யூத பண்டிகையின் போது ஒரு பெரிய அளவிலான துப்பாக்கிச் சூடு நடந்தது. ஆயுதமேந்திய இரண்டு தாக்குதல்காரர்கள் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 29 பேர் காயமடைந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை என்பதால், இன்று மாலை 5 மணி அளவில் கடற்கரையில் ஏராளமான மக்கள் கூடியிருந்ததாகவும், எட்டு நாள் புனித ஹனுக்கா பண்டிகையின் முதல் நாளைக் கொண்டாட அங்கு கூடியிருந்த யூதர்களில் கணிசமானவர்கள் என்று ஆஸ்திரேலிய ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சிட்னி பாதுகாப்பு அமைப்புகள் தாக்குதல் நடத்திய இருவரையும் கைது செய்துள்ளன.
இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், போண்டி கடற்கறையில் நிகழ்ந்துள்ள சம்பவங்கள் அதிர்ச்சி மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. காவல்துறையினரும் அவசரகால மீட்புப் பணியாளர்களும் உயிர்களைக் காப்பாற்ற களத்தில் உள்ளனர். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரைப் பற்றியும் எனது எண்ணங்கள் உள்ளன. நான் இப்போதுதான் காவல்துறை மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பகுதி பிரீமியருடன் பேசியுள்ளேன் . நாங்கள் காவல்துறையுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
