பிரபல WWE மல்யுத்த வீரரும் நடிகருமான ஜான் சீனா, தன்னுடைய கடைசி போட்டியில் தோல்வியடைந்த நிலையில் ஓய்வு பெற்றார்.
2002-ம் ஆண்டு அறிமுகமான ஜான் சீனாவுக்கு, உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் உண்டு. அதற்கு காரணம் அவருடைய தனித்துவமான சண்டைப் பாணி. அதன் மூலம் உலக அளவில் ரசிகர்களை அவர் கவர்ந்தார். ரிங்குங்கள் சண்டைக்காக அவர் என்ட்ரி கொடுக்கும் அந்த தருணத்தில் ஒலிக்கும் பின்னணி இசை பலரது போனில் ரிங்டோனாக ஒலித்தது உண்டு.
WWE-ல் ராக், டிரிபிள் எச், அன்டர்டேகர், கேன், டீசல் ஆகியோர் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் அறிமுகமான வீரர்களில் முக்கியமானவர் ஜான் சீனா. முக்கிய ஜாம்பவான்களான தி ராக், ட்ரிபிள் ஹெச், ரேண்டி ஆர்ட்டன், தி அண்டர்டேக்கர், தி கிரேட் காளி, படிஸ்டா, புராக்லெஸ்னர் உள்ளிட்டோருடன் மோதியுள்ளார். 14 முறை WWE சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். இந்நிலையில், தனது கடைசி போட்டியில், கன்தரிடம் தோல்வி அடைந்து விடைபெற்றார்.

மல்யுத்தம் தவிர ’தி சூசைட் ஸ்குவாட்’, ‘ஃப்ரீலான்ஸ் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும், டிசி காமிக்ஸின் பிரபலமான ‘பீஸ்மேக்கர்’ வெப் தொடரில் பிரதான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
