பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே கேமரூன் கிரீனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.25.20 கோடிக்கு வாங்கியது.
இந்தியன் பிரீமியர் லீக் 2026க்கான மினி ஏலம் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு அபுதாபியில் உள்ள எதிஹாட் அரங்கில் தொடங்கியது. இந்த மினி ஏலத்தில் ஒரு நல்ல ஆல்ரவுண்டர் (பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறந்தவர்) இல்லாததால், கேமரூன் கிரீனுக்கு நிறைய பணம் கொக்கப்படலாம் என்று கூறப்பட்டது. இருப்பினும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள், மினி ஏலத்தில் ஒரு நல்ல ஆல்ரவுண்டரைத் தேர்ந்தெருக்க ஆர்வம் காட்டின. இந்தநிலையில், கேமரூன் கிரீனை தங்கள் அணிக்கு எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கேகேஆருக்கும் இடையே கடுமையான ஏலப் போர் நடந்தது,
இதனால் அவரது ஏலத்தொகை ரூ2 கோடியில் இருந்து ஜெட் வேகத்தில் உயர்ந்தது.ரூ.43.40 கோடி வைத்திருந்த போதிலும், ரூ.25 கோடிக்கு பிறகு ஏலம் கேட்பதை சிஎஸ்கே நிறுத்தியது. இதையடுத்து, ரூ.25.20 கோடிக்கு கேகேஆர் அணி அவரை எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் ஏல வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த வீரராக கிரீன் மாறியுள்ளார், 2024 ஏலத்தில் கேகேஆர் அணி ரூ.24.75 கோடிக்கு வாங்கிய மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை கேம்ரூன் கிரீன் முறியடித்துள்ளார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.
இதேபோல், கேமரூன் கிரீனை ஏலத்தில் எடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி, அவர்களின் கையில் ரூ.2.75 கோடி மட்டுமே இருந்ததால், அவர்கள் அதிக தொகையை ஏலம் எடுக்கவில்லை. பின்னர் KKR மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே கடுமையான ஏலப் போர் நடந்தது. ராஜஸ்தான் அணியிடம் ரூ.16.05 கோடி மீதமுள்ள நிலையில், கிரீனை வாங்க ரூ.13.40 கோடி வரை ஏலம் கேட்டது குறிப்பிடத்தக்கது.
