வெனிசுலாவிற்கு எதிராக ஆயுதப் படையைப் பயன்படுத்துவது முழு பிராந்தியத்திற்கும் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்,
நேற்று நடைபெற்ற 67-வது மெர்கோசூர் மற்றும் கூட்டணி உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரேசில் அதிபர் லூலா, வெனிசுவேலாவுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் இராணுவ அழுத்தம் குறித்து பேசினார்.
அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள், கடற்படை தடுப்பு நடவடிக்கைகள், மற்றும் வெனிசுவேலா என்ற கரீபிய நாடில் உள்ள இராணுவ இருப்பு மிகவும் கவலைக்கிடமானவை என அவர் கூறினார்.
சின்ஹுவா செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, இதை வெளிப்புற பிராந்திய சக்தியொன்றால் மேற்கொள்ளப்படும் இராணுவ தலையீடு என லூலா விவரித்தார். இந்த நிலைமை முழு லத்தீன் அமெரிக்காவையும் அதிர்ச்சியடையச் செய்து, கவலைக்குள் தள்ளியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தென் அமெரிக்காவிற்கு அமைதியும் செழிப்பும் மட்டுமே உண்மையான பாதை என்று லூலா டா சில்வா திட்டவட்டமாகக் கூறினார். சர்வதேச சட்டத்தின் வரம்புகள் சோதிக்கப்பட்டு வருகின்றன. வெனிசுலாவில் ஆயுதமேந்திய தலையீடு என்பது முழு கண்டத்திற்கும் ஒரு மனிதாபிமானப் பேரழிவாக இருக்கும், மேலும் அது உலகிற்கு ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்.
பிரேசில் அதிபர், தான் சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் பேசியதாகவும் தெரிவித்தார். அந்த உரையாடலின் போது, இராணுவ மோதலை விட பேச்சுவார்த்தையும் சமரசமுமே அதிக பலனளிக்கும் மற்றும் குறைந்த தீங்கு விளைவிக்கும் என்று லூலா, டிரம்பிடம் கூறியிருக்கிறார்.
