தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்தவகையில் வார தொடக்க நாளான இன்று காலையில் தங்கம் விலை உயர்ந்தது. இந்தநிலையில் மீண்டும் உச்சத்தை எட்டி, ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
(டிச.22) இன்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,480-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,840-க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று 2-வது முறையாக தங்கம் விலை உயர்ந்து ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. அதன்படி தங்கம் விலை கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,570-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,00,560-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 231 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
