2026ம் ஆண்டிற்கான தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 19ஆம் தேதி கூடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு முன் நடைபெற உள்ள கூட்டத்தொடர் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால், வழக்கமான முழு நிதிநிலை அறிக்கைக்குப் பதிலாக, அதற்கு முன்னதாக இடைக்கால பட்ஜெட் (Interim Budget) மட்டுமே தாக்கல் செய்ய முடியும். மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பிறகு, தமிழக சட்டசபையில் பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இந்த இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெறும் கட்சி, புதிய நிதிநிலை அறிக்கையை (முழுமையான பட்ஜெட்) ஜூன் மாதம் முழுமையாக தாக்கல் செய்யும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
ஆனால் தற்போது புதிய தகவலாக, 2026ம் ஆண்டிற்கான தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 19ஆம் தேதி கூடலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரத்தில் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும்
ஆனால் இந்த ஆண்டு எஸ் ஐ ஆர் பணிகள் காரணமாக பொங்கலுக்கு பிறகு சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது, அதன்படி ஜனவரி 19ஆம் தேதி சட்டப்பேரவை கூடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபை தேர்தலுக்கு முன் நடைபெற உள்ள இறுதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் என்பதால் பல்வேறு அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது
