Close Menu
    What's Hot

    கனடாவில் மற்றொரு இந்திய மாணவர் சுட்டுக் கொலை!. ஒரே வாரத்தில் 2 பேர் பலியான அதிர்ச்சி!

    நைஜீரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல்; அதிபர் டிரம்ப் தகவல்

    ‘மேக் இன் இந்தியா வெற்றியை ஒப்புக்கொண்ட ராகுலுக்கு நன்றி’: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»ராசிபலன்»12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31
    ராசிபலன்

    12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31

    Editor TN TalksBy Editor TN TalksDecember 26, 2025No Comments15 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rasi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை- சுக ஸ்தானத்தில் குரு(வ) – பஞ்சம ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் – லாப ஸ்தானத்தில் சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன.

    பலன்கள்: இந்த வாரம் மனதில் இருக்கும் கவலைகள் மறையும். எதிலும் ஒரு வேகம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடும் போது கவனம் தேவை. குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கு இடையே இருந்த மன வருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளுடன் மனதுக்கு பிடித்த இடத்திற்கு சென்று பொழுதை கழிப்பீர்கள்.

    வீடு, மனை போன்ற முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் ஸ்தானத்தில் சனி அமர்ந்திருக்கிறார். தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்தில் இருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும்.

    பெண்களுக்கு செல்வசேர்க்கை உண்டாகும். கலைத்துறையினருக்கு எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமையும் அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய மனக்கவலை உண்டாகும். பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

    அஸ்வினி: இந்த வாரம் பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள்.

    பரணி: இந்த வாரம் பண புழக்கம் திருப்தி தரும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பாராட்டு கிடைக்கலாம். எனினும் வீண் அலைச்சல், தடை, தாமதம் உண்டாகும்.

    கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் காரியங்கள் தடைபட்டாலும் பின்னர் நன்றாக நடந்து முடியும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். பணம் வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், தொழில் வியாபாரம் சீராக நடக்கும்.

    பரிகாரம்: முருகனை வணங்கினால் கஷ்டம் நீங்கும்.

    ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ) – சுக ஸ்தானத்தில் கேது – சப்தம ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் – தொழில் ஸ்தானத்தில் சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன.

    பலன்கள்: இந்த வாரம் மனதில் நிம்மதி உண்டாகும். உதவி என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவிகளை செய்வீர்கள். ஆடை, ஆபரணம் வாங்குவதால் செலவு உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையை கேட்டு நடந்து கொள்வது மனதிற்கு திருப்தியை தரும். கணவன், மனைவிக்கு இடையே இருக்கும் அன்பு நீடிக்கும்.

    தந்தை வழியில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். பிதுரார்ஜித சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். எதிலும் ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. இல்லையெனில் பலரையும் விரோதித்துக் கொள்ள வேண்டி இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும்.

    நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். பெண்களுக்கு ம்ற்றவர் ஆலோசனையை கேட்டு அதன்படி நடந்து காரிய வெற்றி அடைவார்கள். கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் அகலும். தாங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். மாணவர்களுக்கு வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும்.

    கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும்.

    ரோகிணி: இந்த வாரம் பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். மனதில் எதை பற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள்.

    மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும். பெண்களுக்கு டென்ஷன், வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை உண்டாகலாம். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகளில் சாதகமான நிலை காணப்படும்.

    பரிகாரம்: மாரியம்மனை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

    மிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு குரு(வ) – தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது – ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – சப்தம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் – பாக்கிய ஸ்தானத்தில் சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன.

    பலன்கள்: இந்த வாரம் உடல் ஆரோக்கியம் பெறும். வாக்கு வன்மையால் எந்த காரியத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் மூலம் தேவையான உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.

    தாமதமாகி வந்த சுப காரியங்கள் சிறப்பாக நடக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு குறைந்து மகிழ்ச்சியுடன் காணப் படுவார்கள். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள்.

    கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்க பாடுபடுவீர்கள். எதிலும் முன்னேற்றம் உண்டாகும்.

    மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் தானதர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். வியாபார போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது.

    திருவாதிரை: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு உத்தியோக மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே திடீர் மன வருத்தம் ஏற்படலாம். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும்.

    புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நல்லது. வழக்குகளில் மெத்தன போக்கு காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். மனதில் ஒரு வித கவலை இருக்கும். மாணவர்களுக்கு தடைகளை தாண்டி கல்வியை கற்க செய்யும் முயற்சி வெற்றி பெறும். சிறப்பாக படித்து முடிப்பீர்கள்.

    பரிகாரம்: சிவனை வணங்க காரியத் தடை நீங்கும்.

    கடகம்: (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை- ராசியில் குரு(வ) – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் – அஷ்டம ஸ்தானத்தில் சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன.

    பலன்கள்: இந்த வாரம் பண வரத்து அதிகரிக்கும். அடுத்தவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைக்காமல் நேரடியாக செய்வது நன்மை தரும். குடும்ப ஸ்தானத்தை குரு பார்க்கிறார். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். அமைதியாக இருக்க முயன்றாலும் கூட மற்றவர்கள் வலுக்கட்டாயமாக பேசுவார்கள். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது.

    தொழில் வியாபாரம் தொடர்பாக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாக திறமை பளிச்சிடும். எதிர்ப்புகள் குறையும். காரியதடை அகலும். பெண்களுக்கு எந்த ஒரு வேலையையும் அடுத்தவரை நம்பி ஒப்படைக்காமல் நேரடியாக கவனிப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

    இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். மாணவர்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும்.

    புனர் பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற மனக்கவலை உண்டாகும். வழக்கு விவகாரங்களில் தாமதமான போக்கு காணப்படும். நிர்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம்.

    பூசம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலை உண்டாகும். சக ஊழியர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.

    ஆயில்யம்: இந்த வாரம் தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். பண வரத்து திருப்தி தரும். தேவையான உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் திறமை வெளிப்படும்.

    பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்கி வழிபட தடைகள் நீங்கும்.

    சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை- ராசியில் கேது – சுக ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் – களத்திர ஸ்தானத்தில் சனி, ராகு – விரைய ஸ்தானத்தில் குரு(வ) என கிரக நிலைகள் உள்ளன.

    பலன்கள்: இந்த வாரம் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வீண் செலவு குறையும். ராசிநாதன் சூரியனின் சஞ்சாரம் எதிலும் ஒரு வேகத்தை உண்டாக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். திருமண முயற்சிகள் கைகூடும். வாழ்க்கை துணையால் பண வரத்து இருக்கும். கணவன், மனைவிக்கு இடையே இருந்த மன வருத்தம் நீங்கும். உறவினர்களுடன் இருந்த மன வருத்தம் நீங்கும்.

    குடும்பத்தில் பொன்னான தருணங்கள் நிகழும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புத்தி சாதூரியம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். பணி உயர்வு சம்பந்தமான தேர்வுகளில் தேர்ச்சி பெறுவீர்கள். மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும்.

    பெண்களுக்கு மற்றவர்களுடன் இருந்த மன வருத்தம் நீங்கி நட்பு உண்டாகும். கலைத்துறையினருக்கு வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரலாம். திறமை வெளிப்படும். சாமர்த்தியமான பேச்சு இருக்கும்.

    மகம்: இந்த வாரம் பண வரத்து சீராக இருக்கும். வேலைப்பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். கை, கால் வலி, உடல் சோர்வு உண்டாகலாம். அக்கம் பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். கவுரவம் பாதிக்கும்படியான சூழ்நிலை வரலாம்.

    பூரம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். இயந்திரங்கள், ஆயுதங்கள், நெருப்பு ஆகியவற்றை கையாளும் தொழிலாளர்கள் கவனமாக இருப்பது நல்லது.

    உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சனைகள் அதனால் வாக்குவாதம் போன்றவை உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியில் தங்க நேரலாம்.

    பரிகாரம்: நரசிம்மரை வணங்க எதிலும் வெற்றி கிடைக்கும்.

    கன்னி: (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – சுக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் – ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி, ராகு – லாப ஸ்தானத்தில் குரு(வ) – அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

    பலன்கள்: இந்த வாரம் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்கள் தங்கு தடையின்றி நடைபெறும். வழக்குகள் உங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கும். ஆரோக்கியக் குறைபாடு நீங்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் நன்மை உண்டாகும்.

    கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திறம்பட செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி சாதகமான பலன் தரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். அனுபவப் பூர்வமான அறிவு திறன் கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை அதிகரிக்கும்.

    பங்கு மார்க்கெட்டில் முன்னேற்றம் காணப்படும். எடுத்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும். பதவி உயர்வு கிடைக்கலாம். பெண்கள் உங்களது செயல்களுக்கு மற்றவர்களது ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினருக்கு எந்த விஷயத்திலும் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடக்கும். எதிர்பாராத அனுபவங்களை பெறுவீர்கள்.

    உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் வீண் அலைச்சல், வேலைப் பளு ஆகியவை அதிகரிக்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்கள் அடுத்தவரை பற்றிய விமர்சனங்கள், கிண்டல், கேலி பேச்சு போன்றவற்றை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.

    அஸ்தம்: இந்த வாரம் தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகி சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும்.

    சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். போட்டிகள் குறையும். எதிர்பார்த்த ஆர்டர் வரும். பண வரத்து திருப்தி தரும். கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். மேல் அதிகாரிகள் ஒத்துழைப்பும் இருக்கும்.

    பரிகாரம்: பெருமாளை பூஜிக்க குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

    துலாம்: (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் – பஞ்சம ஸ்தானத்தில் சனி, ராகு – தொழில் ஸ்தானத்தில் குரு(வ) – லாப ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

    பலன்கள்: இந்த வாரம் எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு காரியங்களை முடிப்பீர்கள். புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்தாலும் மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ள நேரலாம். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நன்மை தரும்.

    நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி பொருட்களை அனுப்புவதில் இருந்த தாமதம் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணத்தை சந்திக்க நேரலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும்.

    கலைத்துறையினருக்கு வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் திடீர் தடை, தாமதம் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரியோர், ஆசிரியர் அரவணைப்பு இருக்கும்.

    சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சனையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்க காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மதிப்பு கூடும்.

    சுவாதி: இந்த வாரம் எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும் பயணங்களின் போது கவனம் தேவை. மாணவர்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டு படிப்பது நல்லது. வகுப்பில் கவனத்தை சிதற விடாமல் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

    விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த வாரம் மற்றவர்கள் ஒப்படைத்த வேலையை பொறுப்போடு செய்து முடிப்பீர்கள். தேவையற்ற மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனை வராமல் தடுக்கலாம். சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பண தேவை உண்டாகலாம்.

    பரிகாரம்: மகாலட்சுமியை வணங்க செல்வம் சேரும்.

    விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை- ராசியில் புதன், சுக்கிரன் – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் – சுக ஸ்தானத்தில் சனி, ராகு – பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) – தொழில் ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

    பலன்கள்: இந்த வாரம் எதிர்ப்புகள் குறையும். எடுத்த காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதம் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வழக்குகள், தகராறுகளில் சாதகமான பலன் கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் அக்கறை காட்டுவீர்கள். அதேவேளையில் கடுமையான முயற்சிகளும் தேவை. குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கணவன், மனைவிக்கு இடையில் இருந்த மனக் கசப்பு மாறும்.

    குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவதன் மூலம் அவர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். மனநிம்மதி உண்டாகும். உறவினர்கள் வருகை இருக்கும். தாய்வழி உறவினர்களிடம் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கும். தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகள் நீங்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாக காணப்படுவார்கள்.

    சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பெண்கள் எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு பணிகளில் கவலைகள் இருந்தாலும் நிறைவாக முடியும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பதில் வேகம் காட்டுவீர்கள். எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.

    விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம்.

    அனுஷம்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷன் தருவதாக இருக்கலாம். கணவன், மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வதும் அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பதும் நல்லது.

    கேட்டை: இந்த வாரம் கோபத்தை கட்டுப் படுத்துவதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். வீண் செலவை தடுக்க திட்டமிட்டு செயல் படுவது நல்லது. மாணவர்கள் சக மாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மிகவும் பொறுமையுடனும், கவனமாகவும் பாடங்களை படிப்பது அவசியம்.

    பரிகாரம்: வாராகியை வணங்கி வர குடும்ப பிரச்சனை தீரும்.

    தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை- ராசியில் சூரியன், செவ்வாய் – தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி, ராகு – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு(வ) – பாக்கிய ஸ்தானத்தில் கேது – விரைய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – என கிரக நிலைகள் உள்ளன.

    பலன்கள்: இந்த வாரம் எல்லா முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சுபச் செலவுகள் இருக்கும். பண வரத்து திருப்தி தரும். உங்களது செயல்களுக்கு யாராவது ஒருவர் உறுதுணையாக இருப்பார்கள். ராசியில் இருக்கும் கிரக கூட்டணியால் பேச்சு திறமை கை கொடுக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஏதாவது குறை கூறுவார்கள். அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன் மனைவிக்கு இடையே தேவையில்லாத விஷயத்தால் மன வருத்தம் ஏற்படலாம்.

    குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் மிதமாக இருக்கும். எதிர்பார்த்த பணவரத்து தாமதப்பட்டாலும் கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்ய வேண்டி இருக்கும். உங்களது பேச்சு திறமையால் மேலிடத்தில் இருப்பவர்களிடம் நல்ல பெயர் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.

    பெண்களது செயல்களுக்கு பக்கபலமாக யாராவது இருப்பார்கள். கலைத்துறையினருக்கு நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.

    மூலம்: இந்த வாரம் சாமர்த்தியமாக செயலாற்றுவீர்கள். சில நேரத்தில் இடம், பொருள் தெரியாமலும் செயல்பட்டு விடுவீர்கள். மனதில் நம்பிக்கை உண்டாகும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும். பேச்சின் இனிமையால் காரிய வெற்றி உண்டாகும். எதிலும் தாமதமான போக்கு காணப்படும்.

    பூராடம்: இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தமான போக்கு மாறும். வேகம் பிறக்கும். கடன் பிரச்சனை தீரும். போட்டிகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்க பெறுவார்கள். இடமாற்றத்துடன் பதவி உயர்வு சிலருக்கு கிடைக்கலாம்.

    உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் குடும்ப பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கு இடையே மனக் கசப்பு நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க நினைப்பீர்கள். எதிர்பாராத திருப்பங்களால் திடீர் நன்மை உண்டாகும்.

    பரிகாரம்: ஸ்ரீ பைரவரை வணங்கி வர மன அமைதி கிடைக்கும்.

    மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி, ராகு – சப்தம ஸ்தானத்தில் குரு(வ) – அஷ்டம ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – விரைய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

    பலன்கள்: இந்த வாரம் சுப காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். நெருக்கமானவர்களுடன் பேசி மகிழ்வீர்கள். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மனதில் இருக்கும் குழப்பம் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே சகஜ நிலை நீடிக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    பிள்ளைகளின் செயல்திறன் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஆக்கபூர்வமான செயல்களை மேற்கொண்டு வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கூறிய பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

    பெண்களுக்கு பயணங்களின் போதும் வாகனங்களை பயன்படுத்தும் போதும் கவனம் தேவை. கலைத்துறையினர் நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். செயல்களில் வேகம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நன்மை தரும்.

    உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். காரிய தடை தாமதம் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த பிரச்சனைகள் தீரும். முடிவு எடுக்க முடியாமல் இழுபறியாக இருந்த விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும்.

    திருவோணம்: இந்த வாரம் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. இழுபறியாக பாதியில் நின்ற காரியம் நன்கு நடந்து முடியும். விரும்பிய காரியத்தை நிறைவேற்ற தேவையான மனோ பலம் கிடைக்கும். வராமல் நின்ற பணம் கைக்கு வந்துசேரும். புதிய நபர்களின் நட்பும், அதனால் மன மகிழ்ச்சியும் ஏற்படும். மதிப்புகள் கூடும்.

    அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலைப்பளு குறையும். திறமையான பேச்சின் மூலம் சக ஊழியர்களின் நட்பை பெறுவீர்கள்.

    பரிகாரம்: விநாயக பெருமானை வழிபட்டு வர காரிய தடைகள் நீங்கும்.

    கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- ராசியில் சனி, ராகு – ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) – களத்திர ஸ்தானத்தில் கேது – தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

    பலன்கள்: இந்த வாரம் மனத் துணிவு உண்டாகும். எதையும் வேகமாக செய்து முடிப்பீர்கள். தடை தாமதம் விலகும். மற்றவர்கள் விஷயத்தில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்க பெறலாம். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பது மன மகிழ்ச்சியை தரும்.

    நினைத்ததை நடத்தி முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சொத்துப் பிரச்சினை தீர்வு பெறும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். வேலைகளை செய்து முடிப்பதில் அக்கறை காட்டுவீர்கள்.

    பெண்கள் எந்த காரியத்தை செய்து முடிப்பதிலும் வேகத்தை காண்பீர்கள். கலைத்துறையினருக்கு அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றிய எண்ணம் மேலோங்கும். அது தொடர்பான பணிகளில் ஈடுபடுவீர்கள்.

    அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் மனதில் ஏதாவது குறை இருக்கும் வெளிக்காட்டமாட்டீர்கள். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும்.

    சதயம்: இந்த வாரம் மனோ தைரியம் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். பாடங்கள் படிப்பதில் தீவிர கவனம் செலுத்துவீர்கள். காரிய தடை தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது.

    பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் சமயத்திற்கேற்ப கருத்துக்களை மாற்றிக் கொண்டு செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவை குறைக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மன அமைதி குறையலாம். கூடுமானவரை பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும்.

    பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சனேயரை வழிபட காரிய வெற்றி உண்டாகும்.

    மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை- பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு(வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் – தொழில் ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் – அயன சயன போக ஸ்தானத்தில் சனி, ராகு என கிரக நிலைகள் உள்ளன.

    பலன்கள்: இந்த வாரம் அறிவுத்திறன் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்க பெறுவீர்கள். பண வரத்து அதிகரிக்கும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. ராசிநாதன் குருவின் சார பலன்கள் மூலம் இசை நாட்டியம் போன்ற கலைகளில் ஆர்வம் பிறக்கும். வீண் ஆசைகள் தோன்றலாம். மனதை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. சின்ன விஷயங்களில் மன நிறைவு உண்டாகும்.

    குடும்பத்தில் இருப்பவர்களுக்காக உழைக்க வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கு இடையே ஒற்றுமை ஏற்படும். குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். வாக்கு வன்மையால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

    சக ஊழியர்களுடன் எளிதில் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. அலுவலகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் அதிகரிக்கும். பெண்களுக்கு கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இருந்த பழைய பகைகள் மாறும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

    பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் எதிர்பார்த்த பண வரவு இருக்கும். புதிய நபர்களிடம் கவனமாக இருப்பது நன்மை தரும். உறவினர் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நன்கு நடக்கும். பண தட்டுப்பாடு ஏற்பட்டு பின்னர் சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த சங்கடங்கள் சரியாகும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும்.

    உத்திரட்டாதி: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களது ஆலோசனை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தி தரும். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசுவதால் வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி தருவதாக இருக்கும்.

    ரேவதி: இந்த வாரம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பண வரத்து இருக்கும். காரிய தடங்கல்கள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சிகள் தேவை. விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். கடன் தொல்லை நீங்கும். வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

    பரிகாரம்: குல தெய்வத்தை வணங்கி வர மனதில் அமைதி ஏற்படும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇன்று நாள் எப்படி? 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு
    Next Article ரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்.. புதிய கட்டணம் எவ்வளவு?
    Editor TN Talks

    Related Posts

    இன்று நாள் எப்படி? 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு

    December 26, 2025

    ஜோதிட நாள்காட்டி 25.12.2025 | மார்கழி 10

    December 25, 2025

    இன்றைய ராசிபலன் @ 25 டிசம்பர் 2025

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கனடாவில் மற்றொரு இந்திய மாணவர் சுட்டுக் கொலை!. ஒரே வாரத்தில் 2 பேர் பலியான அதிர்ச்சி!

    நைஜீரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல்; அதிபர் டிரம்ப் தகவல்

    ‘மேக் இன் இந்தியா வெற்றியை ஒப்புக்கொண்ட ராகுலுக்கு நன்றி’: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

    பாமக-வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்!. கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    வங்கதேச துணைத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

    Trending Posts

    பாமக-வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்!. கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    December 26, 2025

    ரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்.. புதிய கட்டணம் எவ்வளவு?

    December 26, 2025

    ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?

    December 25, 2025

    இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் மீது 50% வரி விதித்த மெக்சிகோ!. டிரம்பை திருப்திப்படுத்தும் முயற்சி?.

    December 11, 2025

    கனடாவில் மற்றொரு இந்திய மாணவர் சுட்டுக் கொலை!. ஒரே வாரத்தில் 2 பேர் பலியான அதிர்ச்சி!

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.