சென்னையில் ஆபரணத் தங்கம் (22 கேரட்) விலை ஒரு கிராம் ரூ.110 உயர்ந்து ரூ.13,000ஐ தொட்டது,
சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.12,890-க்கும், 1 சவரன் தங்கம் ரூ.1,03,120க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 1 கிராம் தங்கம் விலை ரூ.110 உயர்ந்து, ரூ.13,000க்கு விற்கப்படுகிறது. அதேபோல், 1 சவரன் தங்கம் விலை ரூ.880 அதிகரித்து ரூ.1,04,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
1 கிராம் வெள்ளி நேற்று ரூ.254-க்கு விற்கப்பட்டது. 1 கிலோ வெள்ளி ரூ.2.54 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் 1 கிராம் வெள்ளி இன்று ரூ.20 அதிகரித்து ரூ.274-க்கும், 1 கிலோ விலை ரூ.20,000 உயர்ந்து ரூ.2.74 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
