Close Menu
    What's Hot

    திராவிட மாடல் அரசுக்கு, விவசாயிகளின் நலனும், வளர்ச்சியும் தான் முக்கியம் -முதல்வர் ஸ்டாலின்

    H-1B விசா!. இந்தியர்களுக்கு அதிகரிக்கும் சிரமங்கள்!. வெளியுறவு அமைச்சகம் கவலை!

    தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வறண்ட வானிலை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»எஸ்ஏ20 லீக்: பரபரப்பான ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி
    விளையாட்டு

    எஸ்ஏ20 லீக்: பரபரப்பான ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sa
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எம்.ஐ.கேப்டவுன் அணிக்கு எதிரான எஸ்.ஏ.20 லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது.

    ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தென்னாப்பிரிக்காவின் ஃபிரான்சைஸ் டி20 லீக் தொடரான எஸ்.ஏ.20 லீக்கின் நான்காவது சீசன் நேற்று தொடங்கியது. இதில் கேப்டவுனில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்ஐ கேப்டவுன் அணியை எதிர்த்து டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி களமிறங்கிய சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு டெவான் கான்வே மற்றும் கேன் வில்லியம்சன் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், கேன் வில்லியம்சன் 40 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜோஸ் பட்லரும் 22 ரன்களை மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார்.
    இதற்கிடையே தனது அரை சதத்தைப் பதிவு செய்திருந்த டெவான் கான்வே 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 64 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் 22 ரன்களிலும், கேப்டன் ஐடன் மார்க்ரம் 35 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, இறுதிவரை களத்தில் இருந்த எவான் ஜோன்ஸ் 33 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.
    இதன் மூலம் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்களைக் குவித்தது. கேப்டவுன் அணி தரப்பில் ஜார்ஜ் லிண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடிய கேப்டவுன் அணிக்கு ரியான் ரிக்கெல்டன் மற்றும் ரஸ்ஸி வேண்டர் டுசென் தொடக்கம் கொடுத்தனர். இதில் ரிக்கெல்டன் தொடக்கம் முதலே பவுண்டரிகளாக விளாசித் தள்ளி ஸ்கோரை உயர்த்தினார்.

    மறுபக்கம் வேண்டர் டுசென் 2 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய ரீஸா ஹென்றிக்ஸ் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ரிக்கெல்டனுடன் ஜோடி சேர்ந்த ஜேசன் ஸ்மித் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ஜேசன் ஸ்மித் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 41 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

    மறுபக்கம் தொடந்து அதிரடியாக விளையாடி வந்த ரியான் ரிக்கெல்டன் தனது சதத்தைப் பதிவு செய்த நிலையில், 63 பந்துகளில் 5 பவுண்டரிகள், 11 சிக்ஸர்கள் என 113 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் நிக்கோலஸ் பூரன், டுவைன் பிரிட்டோரியஸ், ஜார்ஜ் லிண்டே, ரஷித் கான் போன்ற வீரர்களாலும் எதிரணியின் பந்துவீச்சை சமாளித்து ரன்களைச் சேர்க்க முடியவில்லை.

    இதனால் 20 ஓவர்கள் முடிவில் எம்.ஐ.கேப்டவுன் அணியால் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் தரப்பில் ஈதன் போஷ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் எம்.ஐ.கேப்டவுன் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த போட்டியில் ரியான் ரிக்கெல்டன் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“என்னை நீக்க அன்புமணிக்கு அதிகாரமில்லை”!. ஜி.கே.மணி அட்டாக்!.
    Next Article மகளிர் டி20: ஷஃபாலி, ரேனுகா அபாரம் – டி20 தொடரை வென்று இந்தியா அசத்தல்
    Editor TN Talks

    Related Posts

    ஆண்கள் கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனை!. முதல் இந்திய வீராங்கனை!. வரலாறு படைத்த தீப்தி சர்மா!. 

    December 27, 2025

    மகளிர் டி20: ஷஃபாலி, ரேனுகா அபாரம் – டி20 தொடரை வென்று இந்தியா அசத்தல்

    December 27, 2025

    பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதை பெற்றார் வைபவ் சூர்யவன்ஷி

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திராவிட மாடல் அரசுக்கு, விவசாயிகளின் நலனும், வளர்ச்சியும் தான் முக்கியம் -முதல்வர் ஸ்டாலின்

    H-1B விசா!. இந்தியர்களுக்கு அதிகரிக்கும் சிரமங்கள்!. வெளியுறவு அமைச்சகம் கவலை!

    தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வறண்ட வானிலை!

    கண் இமைக்கும் நேரத்தில் எதிரியை அழிக்கும் திறன் கொண்ட  கல்வாரி ரக நீர்மூழ்கிக் கப்பல்!. ஜனாதிபதி முர்மு பயணம்!.

    கிறிஸ்துவ மக்களுக்கு எதிரான சனாதனத் தாக்குதல் பற்றி விஜய் வாய் திறந்தாரா? திருமா விமர்சனம்!.

    Trending Posts

    தங்கம் விலை மீண்டும் உயர்வு… எவ்வளவு தெரியுமா?

    December 20, 2025

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    திமுக அரசின் சாதனைகளில் 5%- ஆவது அதிமுக ஆட்சியில் நடந்ததா?. முதல்வர் ஸ்டாலின் சேலஞ்ச்!

    December 26, 2025

    திராவிட மாடல் அரசுக்கு, விவசாயிகளின் நலனும், வளர்ச்சியும் தான் முக்கியம் -முதல்வர் ஸ்டாலின்

    December 27, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.