ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, டில்லி போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் 285 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆயுதங்கள், போதைப்பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களிடம் இருந்து 21 நாட்டு துப்பாக்கிகள், 20 தோட்டாக்கள், போதை ப்பொருட்கள், சட்டவிரோத மதுபான பொருட்கள், திருடப்பட்ட 310 மொபைல் போன்கள், 231 பைக்குகள், ஒரு நான்கு சக்கரம் வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக போதைப்பொருட்களை சந்தையில் புழக்கத்தில் விட நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
இது தவிர ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது குற்றச்சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருப்பதற்கு, பட்டியலில் உள்ள குற்றவாளிகள் 116 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் 504 பேர் கைது செய்யப்பட்டனர் என டில்லி போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
