Close Menu
    What's Hot

    ரூ.100 கோடிக்கும் மேல் வசூல்! 2025இல் 31 படங்கள் சாதனை

    “கருணையோடு செயல்படுங்கள்” – பெங்களூரு வீடுகள் இடிப்பு விவகாரத்தில் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் அறிவுரை

    ஆண்டுகள் கடந்தாலும் மக்களால் நினைவு கூரப்படுவார்… விஜயகாந்துக்கு அன்புமணி புகழாரம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»“தனியா, அணியா?” – தேர்தல் கூட்டணி குறித்து விஜய் சூசகம் | ‘ஜனநாயகன்’ விழா
    சினிமா

    “தனியா, அணியா?” – தேர்தல் கூட்டணி குறித்து விஜய் சூசகம் | ‘ஜனநாயகன்’ விழா

    Editor TN TalksBy Editor TN TalksDecember 28, 2025Updated:December 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    thalapathy 69 film gets a new title actor vijay teases first look check full cast storyline release date and other details
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மலேசியாவில் நடைபெற்ற ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் தனது தேர்தல் கூட்டணி குறித்து விஜய் மறைமுகமாக பேசினார்.

    மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிறகு நடைபெறும் முதல் சினிமா விழா என்பதால், தமிழகம் மற்றும் மலேசியாவிலிருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு குவிந்தனர். இந்த விழாவில் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லீ, நடிகை பூஜா ஹெக்டே, பல்வேறு திரைக் கலைஞர்கள், பாடகர்கள் என பெரும் நட்சத்திர பட்டாளமே பங்கேற்றுள்ளது.

    “என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பிகளுக்கு வணக்கம். நான் சினிமாவுக்கு வரும்போது எதிர்கொள்ளாத விமர்சனங்கள் இல்லை. நான் எதிர்கொள்ளாத அவமானங்கள் இல்லை. நிறைய காயங்களை தாண்டிதான் வந்திருக்கிறேன். அந்த மாதிரி நாட்களில் எல்லாம் முதல் நாளில் இருந்தே என்னுடன் நின்றது என் ரசிகர்கள்தான். ஒரு நாள், இரண்டு நாள் இல்லை. 33 ஆண்டுகளாக எனக்காக நின்ற அவர்களுக்காக அடுத்த 30 ஆண்டுகளுக்கு நான் நிற்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.

    எனக்கு ஒன்று என்றால் தியேட்டரில் வந்து நிற்கிறார்கள். நாளைக்கு அவர்களுக்கு ஒன்று என்றால் நான் அவர்கள் வீட்டில் போய் நிற்க விருப்பப்படுகிறேன். எனக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கும் ரசிகர்களுக்காக நான் சினிமாவையே விட்டுக் கொடுக்கிறேன். இந்த விஜய் சும்மா நன்றி என்று சொல்லிவிட்டு போகக் கூடியவன் கிடையாது. நன்றிக் கடனை தீர்த்துவிட்டுச் செல்பவன்.

    நமக்கு நண்பர்கள் இருக்கிறார்களோ இல்லையோ வலுவான எதிரிகள் இருக்க வேண்டும். சும்மா வருபவர்களை எல்லாம் எதிர்த்துக் கொண்டிருக்க முடியாது, இல்லையா? வலுவாக இருப்பவர்களைதானே எதிர்க்க முடியும். அப்போதுதானே நாம் ஜெயிக்கும் அளவுக்கு வலுவாக இருக்கிறோம் என்று அர்த்தம். சமீபமாக நம்மைப் பற்றி ஒரு பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் தனியாக வருவாரா, அணியாக வருவாரா என்று. நாம் எப்போது தனியாக இருந்திருக்கிறோம்.

    33 ஆண்டுகளாக உங்களோடுதானே இருந்திருக்கிறேன். எனவே நாம் ஒரு மிகப்பெரிய அணிதானே? இப்போது கூட வெளிப்படையாக எதுவும் சொல்லமாட்டேன் என்கிறாரே என்ற கேள்வி எழலாம். சஸ்பென்ஸ் என்று ஒன்று இருந்தால் தானே கிக் இருக்கும். இதையெல்லாம் நான் கைதட்டலுக்காக பேசவில்லை. மக்களுக்காக பேசுகிறேன். எல்லாவற்றையும் விட முக்கியம். செய்வதைத்தான் சொல்ல வேண்டும். எனவே 2026 வரலாறு திரும்புகிறது. அதை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்போம்” இவ்வாறு விஜய் பேசினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுரதம் குறைவா? இந்த 10 சூப்பர்ஃபுட்களை இன்றே உங்கள் உணவில் சேர்த்துக்கோங்க!. 
    Next Article 141-ம் ஆண்டு நிறுவன நாள்: காங்கிரஸ் தலைமையகத்தில் கொண்டாட்டம்
    Editor TN Talks

    Related Posts

    ரூ.100 கோடிக்கும் மேல் வசூல்! 2025இல் 31 படங்கள் சாதனை

    December 28, 2025

    கேப்டன் அமெரிக்கா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மீண்டும் வரும் கிறிஸ் இவான்ஸ்!

    December 27, 2025

    ஜனநாயகன் Ramp Walk… நடனமாடிய விஜய்- பூஜா ஹெக்டே: வைரலாகும் புகைப்படங்கள்

    December 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.100 கோடிக்கும் மேல் வசூல்! 2025இல் 31 படங்கள் சாதனை

    “கருணையோடு செயல்படுங்கள்” – பெங்களூரு வீடுகள் இடிப்பு விவகாரத்தில் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் அறிவுரை

    ஆண்டுகள் கடந்தாலும் மக்களால் நினைவு கூரப்படுவார்… விஜயகாந்துக்கு அன்புமணி புகழாரம்

    ஜனவரி 2 முதல் வைகோ பாதயாத்திரை! மதிமுக அறிவிப்பு

    தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம்!

    Trending Posts

    பாலத்தில் தடம் புரண்ட ரயில்!. ஆற்றில் கவிழ்ந்த 10 பெட்டிகள்!. பீகாரில் பரபரப்பு!

    December 28, 2025

    விஜயகாந்த் நினைவு தினம்: உதயநிதி, செல்வ பெருந்தகை அஞ்சலி

    December 28, 2025

    தைவானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்!. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு!. 

    December 28, 2025

    கேப்டன் விஜயகாந்த் நினைவுநாள்!. முதல்வர் ஸ்டாலின் போட்ட ட்வீட்!

    December 28, 2025

    141-ம் ஆண்டு நிறுவன நாள்: காங்கிரஸ் தலைமையகத்தில் கொண்டாட்டம்

    December 28, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.