இலங்கை அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் விளையாடி வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் 3-வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.
வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் கூறும்போது, ‘‘முதல் 3 போட்டிகளிலுமே நாங்கள் அபாரமாக செயல்பட்டோம். 3-வது ஆட்டத்தில் இந்திய அணியின் ஒட்டுமொத்த சிறப்பான செயல்பட்டால் வெற்றியைச் சுவைத்துள்ளோம். வரும் ஜூனில் நடைபெறும் மகளிர் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றுவதுதான் எங்கள் இலக்கு’’ என்றார்.
