ஆண்டுகள் கடந்தாலும், மனித நேயத்திற்காக மக்களால் விஜயகாந்த் நினைவு கூரப்படுவார் என அன்புமணி ராமதாஸ் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் நான் அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.
தமிழக அரசியலில் மிகவும் வித்தியாசமான மனிதர். குறுகிய காலமே ஆனாலும் அவருடன் பழகிய நாள்கள் மறக்க முடியாதவை. மனித நேயத்தின் சிகரமாக திகழ்ந்தவர். ஆண்டுகள் கடந்தாலும் மனித நேயத்திற்காக என்றென்றும் தமிழ்நாட்டு மக்களால் அவர் நினைவுகூறப்படுவார்.
இவ்வாறு அந்தப் பதிவில் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
