Close Menu
    What's Hot

    திருத்தணி ரயிலில் கத்தியுடன் சிறுவர்கள் ரீல்ஸ்… திமுக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்

    ஆரவல்லி மலைத் தொடரை வரையறுக்கும் தீர்ப்பு நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு

    பகை முடிவுக்கு வந்தது! சரத் பவார் கட்சியுடன் அஜித் பவார் கட்சி கூட்டணி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணிதான்! காந்திமதியை விமர்சித்து போட்டி அறிக்கை
    அரசியல்

    பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணிதான்! காந்திமதியை விமர்சித்து போட்டி அறிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksDecember 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pasumai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணியே நீடிப்பார் என  அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    மேலும் காந்திமதி நியமனத்திற்கு கடும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து  வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முனைவர் சௌமியா அன்புமணி 2004-ஆம் ஆண்டு முதல் பசுமைத் தாயகம் தலைவராக இருக்கிறார். அதற்கு முன்பு 2002-ஆம் ஆண்டு முதலே பசுமைத் தாயகம் சுற்றுச்சூழல் இதழின் ஆசிரியராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

    2002- ஐநா புவி உச்சிமாநாடு தொடங்கி, 2009 ஐநா கோபன்ஹெகன் காலநிலை மாநாடு என ஏராளமான சர்வதேச சுற்றுச்சூழல் நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறார். இன்று பரபரப்பாக பேசப்படும் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை காக்க 2003-ஆம் ஆண்டிலேயே ஆவணப்படம் வெளியிட்டவர் அவர். தமிழ்நாட்டின் சமச்சீர் கல்விக்கு வழிவகுத்த ‘இன்றைய தேவைக்கேற்ற கல்வி முறை’ எனும் மாநாட்டை பசுமைத் தாயகம் சார்பில் நடத்தியவர் அவர்தான்.

    தமிழ் நாடெங்கும் லட்சக்கணக்கான மரங்களை நட்டுவளர்த்தவர் முனைவர் சௌமியா அன்புமணி ஆவார். நூற்றுக்கணக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பல்வேறு கல்லூரிகளில் நடத்தி தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் அறிவை வளர்த்தவர்களில் அவர் முக்கியமானவர். இருபது ஆண்டுகாலமாக அவர் நடத்திவரும் பசுமைத் தாயகம் சுற்றுச்சூழல் இதழின் தலையங்க கட்டுரைகள் ஒரு நூலாக வெளியிடப்பட்டுள்ளது

    “கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் தானுந்தன் பொல்லாச் சிறகை விரித்தாடினார் போலுமே” அதாவது. ‘மயிலைப் பார்த்து வான்கோழியும் தனது சிறகை விரித்து ஆட முயன்றது’ போன்று, சுற்றுச்சூழல் அரசியல் குறித்து எள்முனையளவு கூட ஏதும் அறியாத யாரோ ஒருவரைக் காட்டி, பூசாரிகள் சில திடீர் அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். அவை வெறும் கேலிக்கூத்துகள் தவிர வேறெதுவும் இல்லை.

    முதலில் பசுமைத் தாயகம் ஒரு அரசு சாராத தொண்டு அமைப்பு. அது அரசியல் கட்சியிம் துணை அமைப்பு இல்லை. அரசியல் கட்சிக் கூட்டங்களில் பசுமைத் தாயகத்தின் நடவடிக்கைகளை தீர்மானிக்க முடியாது. பசுமைத் தாயகத்தின் தலைவரை யாரும் நீக்கவும் சட்டத்தில் இடமில்லை. பசுமைத் தாயகத்தின் தலைவர் தாமாக பதவி விலகினால் தான் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். பசுமைத் தாயகத்துக்கு புதிய தலைவரை நியமிப்பதாக அறிவிப்பதெல்லம் வெறும் வெட்டி அறிவிப்புகள் தவிர வேறெதுவும் இல்லை.

    எனவே, பசுமைத் தாயகம் தலைவராக முனைவர் சௌமியா அன்புமணி நீடிக்கிறார். அதில் எந்த மாற்றமும் இல்லை. ‘எதை தின்றால் பித்தம் தெளியும் என தெரியாமல்’ பேசுகிற பூசாரிகள் கும்பல் – தேர்தல் அறிவிக்கப்படும் வரை இப்படித்தான் ஏதாவது உளறிக் கொண்டிருப்பார்கள். அவற்றில் நம் நேரத்தை வீணடிக்காமல் ஆக்கபூர்வமான நமது பணிகளில் கவனம் செலுத்துவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சேலம் பொதுக் குழு கூட்டத்தில் பசுமைத் தாயகத்தின் தலைவர் பதவியிலிருந்து சவுமியா அன்புமணியை நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டார். அவருக்கு பதிலாக மகள் ஸ்ரீகாந்திமதியை பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக நியமித்துள்ளார். மேலும் பசுமைத் தாயகம் என்ற பெயரை சவுமியா பயன்படுத்தக் கூடாது என்றும் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்தார்.

    ஏற்கெனவே பாமகவில் நிர்வாகிகளை நீக்குவதும் பதிலுக்கு நியமிப்பதும் என அன்புமணி தரப்பும் ராமதாஸ் தரப்பும் செய்து வந்த நிலையில் தற்போது பசுமைத் தாயகத்திலும் இது போன்று ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய் உடன் கூட்டணி உறுதியானது? தவெக உடன் ஒப்பந்தம் போட்ட டிடிவி தினகரன் – ஓபிஎஸ்? மிகப்பெரிய முடிவு
    Next Article மகரவிளக்கு வழிபாடு: சபரிமலை ஐயப்பன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடை திறப்பு
    Editor TN Talks

    Related Posts

    திருத்தணி ரயிலில் கத்தியுடன் சிறுவர்கள் ரீல்ஸ்… திமுக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்

    December 29, 2025

    பல்மருத்துவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் திமுக அரசு! நயினார் நாகேந்திரன் தாக்கு

    December 29, 2025

    ‘‘திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கஞ்சா கலாச்சாரம் உச்சத்தை அடைந்துள்ளது’’ – அன்புமணி

    December 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருத்தணி ரயிலில் கத்தியுடன் சிறுவர்கள் ரீல்ஸ்… திமுக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்

    ஆரவல்லி மலைத் தொடரை வரையறுக்கும் தீர்ப்பு நிறுத்தி வைப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு

    பகை முடிவுக்கு வந்தது! சரத் பவார் கட்சியுடன் அஜித் பவார் கட்சி கூட்டணி!

    பல்மருத்துவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் திமுக அரசு! நயினார் நாகேந்திரன் தாக்கு

    மீண்டும் இணையும் ‘சூப்பர் டீலக்ஸ்’ கூட்டணி?

    Trending Posts

    திருத்தணி ரயிலில் கத்தியுடன் சிறுவர்கள் ரீல்ஸ்… திமுக அரசு மீது இபிஎஸ் கடும் விமர்சனம்

    December 29, 2025

    மகனை சரியா வளர்க்கல; கனவில் சொன்ன தாய்!. கண்ணீர் சிந்திய ராமதாஸ்!.

    December 29, 2025

    விஜய் நாவை அடக்கி பேசவேண்டும்!. செல்லூர் ராஜு கொந்தளிப்பு!

    December 29, 2025

    உன்னாவ் வன்கொடுமை வழக்கு!. எந்த சூழ்நிலையிலும் குல்தீப் செங்காரை விடுவிக்க முடியாது!. ஜாமீனை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!

    December 29, 2025

    ‘‘திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கஞ்சா கலாச்சாரம் உச்சத்தை அடைந்துள்ளது’’ – அன்புமணி

    December 29, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.