ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் விஜய்யின் தவெக கூட்டணியின் இடம்பெறுவார்கள் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், களத்தில்தான் ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் உண்மையான நிலை தெரியும். மக்கள் அளிக்கும் வரவேற்பை பார்க்கும்போது தவெக முதலிடம் பிடிக்கும் என்று நம்பிக்கை இருப்பதாக கூறினார்.
அதிமுக, திமுகவை தவிர்த்து ஒரு புதிய கட்சி தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணமே மக்களுக்கு வந்துவிட்டதாக கூறிய அவர், ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்புகள் தேர்தல் நேரத்தில் வெளியிடப்படுவதாகவும், அது மக்கள் கவனத்தை திசை திருப்பும் முயற்சியாக இருக்கிறது என்று விமர்சித்தார்.
மேலும், உலகளவில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர் குறித்த ஆய்வுகளில் விஜய் முதலிடத்தில் இருப்பதாக குறிப்பிட்ட செங்கோட்டையன், அடுத்த முதல்வர் விஜய்தான் என்று மக்கள் கருதுவதாக தெரிவித்தார்.
பொங்கல் வரை பொறுத்திருந்து பாருங்கள், தவெகவில் எத்தனை பேர் இணைவார்கள் என்பதை நீங்கள் நேரில் பார்ப்பீர்கள், நல்லவர் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே மக்களின் விருப்பம், எம்.ஜி.ஆருக்கு பிறகு அந்த இடத்தை நிறப்புபவர் விஜய் தான். மேலும் தவெக கூட்டணியில் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று கூறினார்.
