Close Menu
    What's Hot

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»மேகதாது வழக்கு: தமிழக அரசின் மறு ஆய்வு மனு தள்ளுபடி.. சுப்ரீம்கோர்ட் அதிரடி..!!
    Featured

    மேகதாது வழக்கு: தமிழக அரசின் மறு ஆய்வு மனு தள்ளுபடி.. சுப்ரீம்கோர்ட் அதிரடி..!!

    editor5By editor5May 25, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 27
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேகதாது வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான தமிழக அரசின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது.

    காவிரி நீர் பங்கீடு பிரச்னையில் முக்கியத்துவம் வாய்ந்த மேகதாது அணை திட்டத்துக்கு தொடர்புடைய திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க கர்நாடக அரசுக்கு தடை விதிக்க முடியாது என கடந்த நவம்பர் 13, 2025 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு (நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், விபுல் எம். பஞ்சோலி) இந்த மனுவை தங்கள் அறையிலேயே (Chamber) பரிசீலித்து, மறுஆய்வுக்கு போதுமான அடிப்படை இல்லை என முடிவு செய்தது. இதன்மூலம் கர்நாடக அரசு திட்ட அறிக்கை தயாரிக்கும் பாதை தொடரும் என்பது உறுதியாகியுள்ளது. முன்னதாக, 2025 நவம்பர் 13-ம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கை தயாரிப்புக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறியது.

    தமிழ்நாடு தரப்பில் எழுப்பப்படும் அச்சங்கள் அனைத்தும் மிகவும் ஆரம்பக் கட்டத்திலானவை என்றும், DPR முழுமையாக தயாரிக்கப்பட்டு மத்திய நீர் ஆணையத்துக்கு சமர்ப்பிக்கப்படும்போது, தமிழ்நாடு அரசு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றிடம் கருத்து கேட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ஏற்க முடியாது எனக் கூறிய தமிழ்நாடு அரசு, கடந்த டிசம்பர் மாதம் மறுஆய்வு மனு தாக்கல் செய்தது.

    2013-ம் ஆண்டு நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பிலும், 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலும் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய தமிழ்நாடு, புதிய உத்தரவு முந்தைய தீர்ப்புகளுக்கு எதிரானது என வாதிட்டது. மேலும், இந்த விவகாரத்தில் விரிவான வாதங்கள் தேவைப்படுவதால், சேம்பரில் அல்லாமல் திறந்த நீதிமன்ற அறையில் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியது.

    ஆனால், ஏப்ரல் 15, 2026 அன்று பட்டியலிடப்பட்ட மனுவை நீதிபதிகள் அறையிலேயே பரிசீலித்து, “நவம்பர் 13, 2025 உத்தரவை மறுஆய்வு செய்ய போதுமான முகாந்திரம் இல்லை” எனத் தெரிவித்து இரு மனுக்களையும் (விசாரணை முறை மாற்றம் மற்றும் மறுஆய்வு) நிராகரித்தனர். இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி டெல்டா விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேகதாது அணை திட்டம் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் பங்கீட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக நிர்வாகிகளை கண்டித்து போராட்டம்..! கட்டப்பாஞ்சாயத்து செய்வதாக குற்றச்சாட்டு..!
    Next Article 4 தலைமுறைகளுடன் 100-வது பிறந்தநாளை கொண்டாடிய அம்பிகை பாட்டி!. ஆசி பெற்ற குடும்பத்தினர்!
    editor5

    Related Posts

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.