Close Menu
    What's Hot

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சிங்கப்பெண் திட்டத்தை செயல்படுத்தாதது ஏன்? பெண் பாதுகாப்பில் அரசு தோல்வி: டிடிவி தினகரன் சாடல்..!!
    Featured

    சிங்கப்பெண் திட்டத்தை செயல்படுத்தாதது ஏன்? பெண் பாதுகாப்பில் அரசு தோல்வி: டிடிவி தினகரன் சாடல்..!!

    editor5By editor5June 1, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 25
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பரவிக் கிடக்கும் கஞ்சா உள்ளிட்ட அனைத்து விதமான போதைப் பொருட்களின் விற்பனையை முற்றிலும் தடை செய்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

    சென்னையில் மதுபானக் கூடத்தில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர், 18 வயது இளம்பெண் ஒருவர் கோயம்பேடு மேம்பாலம் அருகே கார் மூலம் ஏற்றி கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு, தமிழக அரசின் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    தினகரன் தனது பதிவில், “ஊடகங்களில் வெளியான இந்தச் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது இளைஞர்களிடையே பரவி வரும் போதைப்பொருட்களின் புழக்கம்தான்” என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இளைஞர்களின் கவனத்தை விளையாட்டுப் பக்கம் திருப்பினால் மட்டுமே போதைப் பழக்கத்தை ஒழிக்க முடியும் என்று கூறியுள்ளார். ஆனால், இந்தக் கருத்து முழுமையடைய வேண்டுமானால், தமிழகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் கிடைக்கும் கஞ்சா உள்ளிட்ட அனைத்து வகை போதைப்பொருட்களின் விற்பனையையும் முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும். இல்லையெனில் இது வெறும் வார்த்தை ஜாலமாகவே முடியும் என்றார்.

    தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற முதல் நாளே கையெழுத்திட்ட சிறப்பு பெண் அதிரடிப் படை இதுவரை செயல்பாட்டுக்கு வராத நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்பத் தொடங்கியுள்ளனர் என்றும் தினகரன் சுட்டிக்காட்டினார். இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் உரிய அனுமதியின்றி இயங்கும் மதுபானக் கூடங்கள் அனைத்தையும் உடனடியாக மூட வேண்டும் என்றும், அங்கு சட்டவிரோதமாக போதைப்பொருட்களை விற்பனை செய்யும் கும்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவெக அரசை தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

    இந்தப் படுகொலை சம்பவம் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் மதுபானக் கூடங்களின் ஒழுங்குமுறை ஆகியவை குறித்து மீண்டும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இரவு நேர மதுபான விற்பனை மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக பல்வேறு அமைப்புகள் ஏற்கனவே கவலை தெரிவித்து வருகின்றன. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், தினகரனின் இந்த வலியுறுத்தல் அரசியல் அரங்கில் புதிய விவாதங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெல்லி ராஜ்யசபா எம்.பி. தேர்தல்: 255வது முறையாக சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் வேட்புமனு தாக்கல்..!!
    Next Article மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.94 லட்சம் கோடி… பொருளாதார வளர்ச்சியின் அறிகுறியா?
    editor5

    Related Posts

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    July 17, 2026

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    July 17, 2026

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு… மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

    பிக் பாஸ் சீசன் 10!. முன்கூட்டியே களமிறங்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.