Close Menu
    What's Hot

    விலை பேசப்படும் எம்.எல்.ஏ-க்கள்:  தவெக மீதான குற்றச்சாட்டு குறித்து திருமாவளவன் கவலை

    அதிமுகவை அழிச்சது வேற யாரும் இல்ல.. இபிஎஸ் தான்..!! அமைச்சர் நிர்மல்குமார் விளாசல்..!!

    பழனி கோவில் நில மோசடி வழக்கில் புதிய திருப்பம்… சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நள்ளிரவில் வீடு வீடாக கதவைத் தட்டி மர்ம நபர்கள் அட்டகாசம்..!! குடியாத்தத்தில் பரபரப்பு..!!
    Featured

    நள்ளிரவில் வீடு வீடாக கதவைத் தட்டி மர்ம நபர்கள் அட்டகாசம்..!! குடியாத்தத்தில் பரபரப்பு..!!

    editor5By editor5July 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2026 07 15 at 1.37.13 PM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே கல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகர், ஓம் சக்தி கோவில் தெருவில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அமைதியான குடியிருப்பு பகுதியாக உள்ள இந்தத் தெருவில், கடந்த இரண்டு நாட்களாக நள்ளிரவு நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் வீடு வீடாகச் சென்று கதவுகள் மற்றும் இரும்பு கேட்களை தட்டிவிட்டு உடனடியாக மறைந்து செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்தச் சம்பவம் குறித்து சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு (சிசிடிவி) கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர்கள் ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டிவிட்டு சற்று தூரத்தில் நின்று அந்த வீட்டிலிருந்து யாரேனும் வெளியே வருகிறார்களா என்பதை கண்காணித்தது பதிவாகியிருந்தது. இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும், வீடுகளில் இருந்து யாரும் வெளியே வராதபட்சத்தில், அந்த வீட்டில் யாரும் விழித்திருக்கவில்லை அல்லது வீட்டில் யாரும் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் மற்றொருவருக்கு சைகை மூலம் தகவல் தெரிவிப்பது போன்ற நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறியுள்ளார். இதனால், எதிர்காலத்தில் திருட்டு சம்பவங்களை நடத்துவதற்காக முன்கூட்டியே வீடுகளை கண்காணித்து ஒத்திகை பார்க்கும் முயற்சியாக இருக்கலாம் என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவுகிறது.

    இதன் காரணமாக, இரவு நேரங்களில் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும், பெண்கள், முதியவர்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வீடு வீடாக கதவைத் தட்டி மறையும் மர்ம நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், ஓம் சக்தி கோவில் தெருவில் வசிக்கும் மக்களிடையே அச்சமும் பதற்றமும் நிலவி வருகிறது.

    gudiyatham theft attempt
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசு பள்ளி வளாகத்தில் பகீர் சம்பவம்..!! 12ம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து..!! சக மாணவன் வெறிச்செயல்..!!
    Next Article மக்களே உஷார்..!! அடுத்த 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தப்போகுது..!! வானிலை அப்டேட்..!!
    editor5

    Related Posts

    விலை பேசப்படும் எம்.எல்.ஏ-க்கள்:  தவெக மீதான குற்றச்சாட்டு குறித்து திருமாவளவன் கவலை

    July 15, 2026

    அதிமுகவை அழிச்சது வேற யாரும் இல்ல.. இபிஎஸ் தான்..!! அமைச்சர் நிர்மல்குமார் விளாசல்..!!

    July 15, 2026

    பழனி கோவில் நில மோசடி வழக்கில் புதிய திருப்பம்… சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விலை பேசப்படும் எம்.எல்.ஏ-க்கள்:  தவெக மீதான குற்றச்சாட்டு குறித்து திருமாவளவன் கவலை

    அதிமுகவை அழிச்சது வேற யாரும் இல்ல.. இபிஎஸ் தான்..!! அமைச்சர் நிர்மல்குமார் விளாசல்..!!

    பழனி கோவில் நில மோசடி வழக்கில் புதிய திருப்பம்… சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு!

    “‘வந்தே மாதரம்’ கட்டாயம்: முதல்வர் விஜய் வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது”

    காமராஜரை சொந்தம் கொண்டாடும் தவெக.. இது பொருத்தமில்ல..!! ராஜேந்திர பாலாஜி ஆவேசம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.