Close Menu
    What's Hot

    தூங்கும் தவெக அரசு! எப்போது விழித்துக்கொள்ள போகிறது.. மக்கள் தான் பாவம்..!! ஜெயக்குமார் கடும் தாக்கு..!!

    நவீன நடைமேடைகள், பயணச்சீட்டு முன்பதிவு மையம்… திறப்பு விழாவுக்கு தயாராகும் சென்னை பூங்கா ரயில் நிலையம்

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீடு:  மேலும் அதிகரிக்க திட்டம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பழனி கோவில் நில மோசடி வழக்கில் புதிய திருப்பம்… சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு!
    Featured

    பழனி கோவில் நில மோசடி வழக்கில் புதிய திருப்பம்… சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு!

    editor5By editor5July 15, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 34 5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பழனி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் 1.40 ஏக்கர் நிலம், போலி ஆவணங்கள் மூலம் தனியார் நபர்களின் பெயருக்கு சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ரூ.100 கோடி மதிப்பிடப்படும் இந்த நில மோசடி தொடர்பான விசாரணையை, அதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு தற்போது சிபிசிஐடி சிறப்புப் பிரிவுக்கு மாற்றியுள்ளது.

    வரலாற்றுப் பதிவுகளின்படி, 1888-ஆம் ஆண்டு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்தின் பராமரிப்பிற்காக இந்த நிலம் வழங்கப்பட்டபோது, எந்தச் சூழலிலும் விற்கவோ அல்லது கைமாற்றம் செய்யவோ கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. பல ஆண்டுகளாக தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த இந்த நிலத்தை, நீண்டகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, 2025 செப்டம்பர் 12-ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை மீட்டெடுத்தது. அதன் பின்னர், கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்தும் இலவச வாகன நிறுத்துமிடமாக அந்தப் பகுதி பயன்படுத்தப்பட்டு வந்தது.

    இந்நிலையில், 2026 ஜூலை 6-ஆம் தேதி, வழக்கமான சார்பதிவாளர் விடுப்பில் இருந்த நாளில், பொறுப்பில் இருந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், போலி ஆவணங்களின் அடிப்படையில் இந்த நிலத்தை இரு தனியார் நபர்களின் பெயருக்கு பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அரசு மற்றும் கோயில் சொத்தாக உள்ள இந்த நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.100 கோடி எனக் கூறப்படும் நிலையில், வெறும் ரூ.2 கோடி மதிப்பிலான ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தவுடன், சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அறநிலையத்துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சர்கள், இந்த நிலப் பதிவைத் தடுக்க முன்கூட்டியே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், அவற்றை மீறி பதிவு நடைபெற்றிருப்பது மிகக் கடுமையான முறைகேடு என தெரிவித்தனர்.

    இந்த மோசடியின் பின்னணியில் நில மாஃபியா, போலி அடையாள ஆவணங்களை உருவாக்கிய கும்பல் மற்றும் சில அதிகாரிகளின் கூட்டுச் செயல்பாடு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், சிபிசிஐடி அதிகாரிகள் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் பங்கும் ஆராயப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில், மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை சட்டப்பூர்வமாக ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கமான அலுவலரை திட்டமிட்டு விடுப்பில் அனுப்பிவிட்டு, பொறுப்பில் இருந்த அதிகாரி மூலம் பதிவு மேற்கொள்ளப்பட்டிருப்பது மிகுந்த சந்தேகத்துக்குரிய செயல் என்றும், சார்பதிவாளரை பணியிடை நீக்கம் செய்தது மட்டுமே போதுமான நடவடிக்கையாக இருக்க முடியாது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் முழு உண்மையும் வெளிச்சத்துக்கு வரும் வகையில் விரிவான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடைபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    land issue palani murugan temple
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“‘வந்தே மாதரம்’ கட்டாயம்: முதல்வர் விஜய் வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது”
    Next Article அதிமுகவை அழிச்சது வேற யாரும் இல்ல.. இபிஎஸ் தான்..!! அமைச்சர் நிர்மல்குமார் விளாசல்..!!
    editor5

    Related Posts

    தூங்கும் தவெக அரசு! எப்போது விழித்துக்கொள்ள போகிறது.. மக்கள் தான் பாவம்..!! ஜெயக்குமார் கடும் தாக்கு..!!

    July 15, 2026

    நவீன நடைமேடைகள், பயணச்சீட்டு முன்பதிவு மையம்… திறப்பு விழாவுக்கு தயாராகும் சென்னை பூங்கா ரயில் நிலையம்

    July 15, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீடு:  மேலும் அதிகரிக்க திட்டம்!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தூங்கும் தவெக அரசு! எப்போது விழித்துக்கொள்ள போகிறது.. மக்கள் தான் பாவம்..!! ஜெயக்குமார் கடும் தாக்கு..!!

    நவீன நடைமேடைகள், பயணச்சீட்டு முன்பதிவு மையம்… திறப்பு விழாவுக்கு தயாராகும் சென்னை பூங்கா ரயில் நிலையம்

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீடு:  மேலும் அதிகரிக்க திட்டம்!

    அடடே..!! 10 நிமிஷம் தான்.. வீட்டுக்கே வரும் சிலிண்டர்.. அசத்தும் இன்ஸ்டாமார்ட்..!!

    1,599வது நாளை எட்டிய ரஷியா – உக்ரைன் போர்..!! இன்னமும் குறையாத சூடு.. தொடரும் தாக்குதல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.