திண்டுக்கல் நகரில் அமைந்துள்ள மேட்டுராஜகாபட்டி காளியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் நடைபெறும் பெருந்திருவிழா, இந்த ஆண்டும் கடந்த மே 20, 2025 அன்று சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் கோலாகலமாகத் தொடங்கியது.
விழாவின் முதல் நாளில், 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் பெண்களும் கலந்துகொண்ட பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று, பூஞ்சோலையிலிருந்து இரண்டடி முதல் 16 அடி வரை அழகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் மேளதாளங்கள் முழங்க, 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி சட்டி ஆடி ஊர்வலமாக வந்தனர்.
பின்னர், கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பக்தர்களும் குழந்தைகளும் இறங்கி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வருகிற மே 29, 2025 அன்று கரகம் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியுடன் வைகாசி திருவிழா இனிதே நிறைவடைகிறது.