உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம், நான்கு மணிநேரம் காத்திருந்த மக்கள் அதிகாரிகள் வராததால் விரக்தியுடன் திரும்பிச் சென்றனர்.
கோவை வெள்ளலூர் பகுதியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் என்ற பெயரில் மாவட்ட ஆட்சியர், மற்றும் அதிகாரிகள் இன்று காலை 9 மணிமுதல் மக்களை சந்தித்து குறைகளை கேட்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதை நம்பி காலை 9 மணிமுதல் மதியம் ஒருமணி ஆகியும் அதிகாரிகள் யாரும் வராததால் பொதுமக்கள் விரக்தியுடன் திரும்பி சென்றனர். மேலும் இது மக்களை தேடி மக்களுக்கான திட்டமா? அல்லது மக்களை ஏமாற்றும் திட்டமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். திமுக அரசு மக்களை ஏமாற்ற புதிய, புதிய திட்டங்களுடன் சட்டமன்ற தேர்தலை குறிவைத்து நாடகங்களை அரங்கேற்ற துவங்கியுள்ளது தற்பொழுது வெளிச்சத்திற்க்கு வந்துள்ளது.