தமிழ்நாட்டை சுரண்டி எடுக்கப்படும் பல லட்சம் டன் கனிமங்கள் கேரளா, கர்நாடகாவுக்கு தினமும் செல்கின்றன. இவற்றை தடுக்காமல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி ஆண்டுக்கு ஒருநாள் மட்டும் உரையாற்றினால் போதுமா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக மாணவரணி மாநிலச் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுபற்றி தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள செய்தி வருமாறு…
தமிழ்நாட்டில், 26 மணல் குவாரிகளை திமுக அரசு புதிதாக திறக்க உள்ளது,
குவாரிகளுக்கான குத்தகைக் காலத்தை 30 ஆண்டுகளாக நீட்டித்துள்ளது.
ரூ.6000 கோடி வரை குவாரிகளில் கனிம ஊழல் நடப்பதாக திருப்பூர் குவாரி வழக்கில் மே மாதம் மதுரை உயர்நீதிமன்றம் சாடியுள்ளது,
தமிழ்நாட்டில் உள்ள 12000… pic.twitter.com/mzFtkfTIMx
— Singai G Ramachandran (@RamaAIADMK) June 6, 2025
தமிழ்நாட்டில், 26 மணல் குவாரிகளை திமுக அரசு புதிதாக திறக்க உள்ளது, குவாரிகளுக்கான குத்தகைக் காலத்தை 30 ஆண்டுகளாக நீட்டித்துள்ளது.
ரூ.6000 கோடி வரை குவாரிகளில் கனிம ஊழல் நடப்பதாக திருப்பூர் குவாரி வழக்கில் மே மாதம் மதுரை உயர்நீதிமன்றம் சாடியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 12000 குவாரிகளில் 7000 குவாரிகள் செயல்பாட்டில் இல்லை..செயல்படும் 5000 குவாரிகளில் 3000 குவாரிகள் தான் உரிமம் பெற்றவை. 2000 குவாரிகளுக்கு உரிமம் இல்லை!
அண்மையில், விபத்தில் 6 பேர் இறந்த சிவகங்கை கல் குவாரியும் உரிமம் காலாவதி ஆன குவாரி தான்..
அனுமதிக்கப்பட்ட அளவை விட பல லட்சம் கன மீட்டருக்கு கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுவதாக நீதிமன்றம் புள்ளிவிவரங்களுடன் கூறியுள்ளது, அனைத்தும் கணினி மயம் ஆனதாக சொன்னாலும், தற்போது வரை குவாரிகளில் கேட் பாஸ் காகிதத்தில் தான் வழங்கப்படுகிறது,
முறைகேடால் மூடப்பட்ட குவாரிகளையும் சுரங்கத்துறை ஆணையர் மீண்டும் திறக்க அனுமதி கொடுத்துள்ளார், அபராதங்களையும் சரியாக வசூலிக்கவில்லை என ஜுனியர் விகடன் செய்தி வெளியிட்டுள்ளது,
இப்படி ஆண்டு முழுவதும் தமிழ்நாட்டை சுரண்டி எடுக்கப்படும் பல லட்சம் டன் கனிமங்கள் தான் கேரளா, கர்நாடகாவுக்கு தினமும் செல்கின்றன. இவற்றை தடுக்காமல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி ஆண்டுக்கு ஒருநாள் மட்டும் உரையாற்றினால் போதுமா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே?. குவாரிகளை மூடவோ அல்லது அரசே ஏற்று முறையாக நடத்தவோ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாரா?
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.