மாவோயிஸ்ட் சந்தோஷ் குமார் அளித்த தகவலின் படி கோவையைச் சேர்ந்த மேலும் ஆறு பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அங்கலகுறிச்சியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். மாவோயிஸ் இயக்கத்தைச் சேர்ந்த இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், பதுங்கி இருந்தார். இவரை தமிழக போலீசார் உதவியுடன் கடந்த பிப்ரவரியில் கேரள மாநிலம் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். சந்தோஷ் குமாரை என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
என்.ஐ.ஏ அதிகாரிகள் கூறும்போது :-
சந்தோஷ் குமார் கேரள மாநிலம் கபினி தள மாவோயிஸ்ட் இயக்க தலைவராக செயல்பட்டு உள்ளார். கடந்த 2017 இல் வீட்டை விட்டு வெளியேறிய சந்தோஷ் குமாரை பொள்ளாச்சியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் தான் மூளைச்சலவை செய்து மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்த்து விட்டு உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் தமிழக – கேரளா எல்லைக்கு அருகே மலப்புரம், கண்ணூர், பாலக்காடு வனப்பகுதியில் ஊடுருவி மனாந்தவாடியில் வனத்துறையினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை சந்தோஷ்குமார் முன் நின்று நடத்தி உள்ளார். சந்தோஷ் குமார் பின்னணியில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாவோயிஸ்டுகளான ரூபேஷ் அவரது மனைவி சைனா, கணபதி, சிகாமணி, செல்வராஜ் ஆகியோரும் இருந்து உள்ளனர். அவர்கள் தலைமையில் செயல்படும் மாவோயிஸ்ட் குழுவைச் சேர்ந்த ஆறு பேர் குறித்து தகவல்களையும் சந்தோஷ்குமார் தெரிவித்து உள்ளார். அதன் அடிப்படையில் தேடுதல் பணி நடந்து வருகிறது.
சந்தோஷ் குமார் வழிகாட்டுதலின்படி தான் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் கார்த்திக் சென்னையில் தங்கி ஆள் சேர்ப்பு பணியில் ஈடுபட்டு உள்ளார். இதற்காக கார்த்திக் தன் பெயரை ராஜேஷ் குமார், கௌதம் கார்த்திக் என மாற்றி உள்ளார். கார்த்திகேயன் கடந்த மாதம் பிப்ரவரியில் கைது செய்ததாகவும் என்றும் என்.ஐ.ஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.