இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான புதிய கேப்டன் யார் என்ற பந்தயத்தில் ஸ்ரேயாஸ் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான கேப்டனாக ரோகித் ஷர்மா செயல்பட்டு வருகிறார். அவருக்கு பிறகு அணியை வழிநடத்தப் போவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சுப்மன் கில், ரிஷப் பண்ட் பெயர்கள் பரிசீலினையில் உள்ளன.
நடந்து முடிந்த 18-வது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனான அபாரமாக செயல்பட்டவர் ஸ்ரேயாஸ். இறுதிப்போட்டி வரை அணியை அழைத்துச் சென்றதில் அவரது பங்களிப்பு முக்கியமானது. இந்நிலையில் கில், பண்ட் பெயர்களோடு ஸ்ரேயாஸ் பெயரும் இணைந்துள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் தொடரில் 2020-ம் ஆண்டு டெல்லி கேப்டனாக அதனை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றது, கடந்த ஆண்டு கொல்கத்தா அணியின் கேப்டனாக சாம்பியன் பட்டம் பெற்றுத் தந்தது, நடப்புத் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இறுதிப்போட்டி வரை முன்னேறியது என்று ஸ்ரேயாஸ் ஒரு கேப்டனாக திறபம்டி செயலாற்றி உள்ளார்.
அதனால் ரோகித் சர்மாவுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் அணியை வழிநடத்தும் பொறுப்பை ஸ்ரேயாசிடம் ஒப்படைக்கலாமா என்பது பற்றி யோசிக்கப்படுகிறதாம். டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை சுப்மன் கில் ஏற்றுள்ள நிலையில், ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு வேறொரு கேப்டன் என்ற கோணத்தில் ஸ்ரேயாஸ் பெயர் அடிபடுகிறதாம்.