ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம் பகுதியைச் சேர்ந்த
பசு மாடு ஒன்று தண்ணீர் குடிக்க சென்ற இடத்தில் சிறிய செம்புக்குள் வாயை விட்டதால் சிரிய சொம்பு மாட்டின் கீழ்பாக்க தாடை நாக்குடன் சேர்ந்து வசமாக மாட்டிக் கொண்டது.
சொம்பை வெளியே எடுக்க இயலாத அந்த பசு மாடு செய்வதறியாமல் கடந்த மூன்று நாட்களாக உணவு உண்ண முடியாமல் அங்கும் இங்குமாக ஊரை சுற்றி ஓடிக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் அதை கவனித்த சில இளைஞர்கள் பெரிய போராட்டத்திற்கு பிறகு சூசகமாக பசுமாட்டை பிடித்து கழுத்திலும் கொம்பிலும் நல்ல இறுக்கமாக கயிற்றில் கட்டிவிட்டு அந்த வாயில் இருந்த சொம்பை மிகவும் போராடி எடுத்து விட்டனர்.
இது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. இன்னும் இரண்டு நாட்கள் அந்த சொம்பு பசுமாடு வாயில் இருந்திருந்தால் பசுமாடு இறப்பதற்கான சூழல் உருவாகி இருக்கும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
சரியான சமயத்தில் உதவி செய்ததால் பசுமாடு மிக சந்தோசமாக துள்ளி குதித்து ஓடியது.
மனித நேயமிக்கவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது….
