Author: Editor TN Talks
ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெண்கள், அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்த நெதன்யாகுவை பாராட்டுவது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிவை செயல்படுத்தும் விதமாக பிணைக் கைதிகளை விடுவிக்கவும், போரை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ளவும் ஹமாஸும், இஸ்ரேலும் ஒப்புக்கொண்டன. இஸ்ரேலின் இந்த முடிவை வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “காசா பகுதியில் நடைபெற்று வரும் மனிதாபிமானமற்ற பேரழிவும், பாலஸ்தீன மக்கள்மீது நிகழ்த்தப்படும் இனப்படுகொலையும் உலகம் முழுவதும் கண்டனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் பாராட்டியிருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது. இஸ்ரேல்–ஹமாஸ் இடையிலான அமைதி ஒப்பந்தத்தை வரவேற்பதாகவும், அது நெதன்யாகுவின் ‘சிறந்த தலைமையின் விளைவாகும்’ என்றும் மோடி தனது…
கரூர் விவகாரம் தொடர்பாக தவெக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உள்பட மொத்தம் 5 வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பும் காரசார விவாதங்களை முன்வைத்தனர். முதலாவதாக, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்து உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு விசாரணைக்கு வந்தது. வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஷ்வரி, அஞ்சாரியா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. தமிழக அரசு சார்பில் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோஹத்கி, வில்சன், ரவீந்திரன் ஆகியோர் வாதாடினர். இரண்டு நீதிபதிகளும் மனுவின் சாராம்சம் தொடர்பாக விவாதித்து வருகின்றனர். அப்போது, தவெக தரப்பு வழக்கறிஞர்கள், “பிரசாரத்திற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டேன் அந்த பிரசாரம் நடைபெற்றன. ஆனால் இந்த விவகாரத்தில் வழக்கில் எதிர்மனுதாரராக இல்லாத ஒருவரை நீதிமன்றம் நேரடியாக விமர்சித்து இருக்கிறது. பல்வேறு கருத்துகளை விஜய் மீது கூறி…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிவை செயல்படுத்தும் விதமாக பிணைக் கைதிகளை விடுவிக்கவும், போரை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ளவும் ஹமாஸும், இஸ்ரேலும் ஒப்புக்கொண்டன. முன்னதாக, 2023, நவம்பரில் முதல்முறையாக இருதரப்பும் தற்காலிக போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டது. ஆனால், கடந்த மார்ச் மாதம் தற்காலிக போர்நிறுத்தத்தை மீறி காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தீவிரப்படுத்தியது. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர அண்மையில் 20 அம்ச அமைதித் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்தார். இதை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்புக்கொண்ட நிலையில், அந்த ஒப்பந்தத்தின் முதல்கட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக கடந்த 4 நாட்களாக இருதரப்பு பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டிய பாலஸ்தீன கைதிகளின் பட்டியலை ஹமாஸ் சமர்ப்பித்தது. இதற்குப் பதிலாக, 2023 அக்டோபர் தாக்குதலின்போது இஸ்ரேலில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட…
தூய்மை பணியாளர்கள் போராட்டம் அறிவித்துள்ளதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ரிப்பன் மாளிகையில் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை ராயபுரம் மற்றும் திரு.வி.க மண்டலங்களின் தூய்மை பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1ஆம் தேதி முதல் 13ம் தேதி வரை நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர்கள், மாநகராட்சி மேயருடன் தூய்மை பணியாளர்கள் நடத்திய 8 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், போலீசார் கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி நள்ளிரவு தூய்மை பணியாளர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்து, பிறகு விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் வீடு, காலை உணவு, சிறப்பு மருத்துவ சிகிச்சை, கல்விக் கட்டணம் உட்பட 6 புதிய…
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை தள்ளி வைக்கும் படி உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழகத்தில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு அக்டோபர் 12ஆம் தேதி போட்டி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. புதிய பாடத்திட்டங்கள் அடிப்படையில் இந்தத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாலும், இத்தேர்வு நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று உத்தேசமாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், முன்கூட்டியே தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், தங்களால் தேர்வுக்கு தயாராக இயலவில்லை என கூறி, தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் விண்ணப்பதாரர்கள் பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர் நீலகண்டன், ‘தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 2 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நுழைவுச்சீட்டு தயாரிக்கப்பட்டு,…
கரூர் விவகாரம் தொடர்பாக தவெக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உள்பட மொத்தம் 5 வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. முதலாவதாக, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்து உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு விசாரணைக்கு வருகிறது. இரண்டாவது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பாஜக வழக்கறிஞரும், மனுதாரருமான ஜி.எஸ்.மணி தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு வருகிறது. மனுவி, ‘இது அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு நடந்த துயர சம்பவம். எனவே சம்பந்தப்பட்ட அனைத்து காவல்துறை, மாவட்ட நிர்வாக துறை, மின்சார துறை மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு பதிந்து முறையான நீதி விசாரணை நடக்க சிபிஐ அல்லது பதவியில் உள்ள அல்லது ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும்’ என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது, சிறப்பு…
கரூர் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை எதிர்த்து தவெக தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. கரூரில் தவெக சார்பில் நடத்தப்பட்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அஸ்ரா கார்க் தலைமையிலான குழுவினர் கரூர் சம்பவத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையை எதிர்த்து தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு கட்சி தொண்டர்களையும், மக்களையும் விஜய் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் கைவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது விஜய் மற்றும் தவெக கட்சின் முன்னணி தலைவர்கள் மீது தவறான எண்ணத்தை உருவாகியுள்ளது. மேலும் கரூர் விவகாரத்தில் அஸ்ரா கார்க் தலைமையில்…
ஆசை வார்த்தை கூறி 15 வயது சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டம் தேவாரம் ஐயப்பன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தங்கபாண்டி மகன் சிவசந்துரு (23). வாலிபர் சிவசந்துரு தேவாரம் பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது தெருவுக்கு அருகே மற்றொரு தெருவில் வசித்து வரும் 15 வயது சிறுமி ஒருவருடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார். இந்த செல்போன் பேச்சு வளர்ந்து அவ்வப்போது இருவரும் தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி தொடர்ந்து ஏமாற்றி அவருடன் தவறான உறவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சிறுமிக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது அவர் இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாக கூறியதை அடுத்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த சிறுமியிடம் விசாரித்த போது,இதற்கு காரணம் சிவசந்துரு என்று கூறியுள்ளார்.…
மதுரையில் தனியார் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைப்பதற்காக கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி, மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள வேலம்மாள் குழுமத்தின் கிரிக்கெட் மைதானம் 12.5 ஏக்கர் பரப்பளவில் 350 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. மதுரையின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைப்பதற்காக இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று மும்பையில் இருந்து தனியார் விமானம் மூலம் எம் எஸ் தோனி தற்போது புறப்பட்டு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். இதனையடுத்து, மதுரை விமான நிலையத்தில் தோனியை பார்ப்பதற்காக மதுரை விமான நிலையத்தில் ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் குவிந்தனர். முதல் முறையாக மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் தோனி வருகையொட்டி காலை முதலே அவரது ரசிகர்கள் விமான நிலையத்தில் காத்திருந்தனர். தோனி வருகையை ஒட்டி விமான நிலையத்தில் காவல்துறையினர்…
கரூரில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினரை விஜய் வரும் 13ஆம் தேதி நேரில் சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கரூர் வேலாயுதம்பாளையத்தில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளில் கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்றனர். ஆளும் திமுக தரப்பினரும், தவெக தரப்பினரும் மாறி, மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர். தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை என தொடர்ச்சியாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதற்கிடையில், விஜய்…