Author: Editor TN Talks

தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வர இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. ஆளுங்கட்சி சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், வெளிநாட்டு முதலீடுகள் என பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. பிரதான எதிர்கட்சியான அதிமுக சார்பில், “மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதுவரை அனைத்து தேர்தல்களிலும், தனித்து களம் கண்டு வரும் சீமான், மாடுகள், மரங்கள், கடல்களிடையே கூட மாநாடு நடத்தி வருகிறார். அதேசமயம், பாமக, தேமுதிக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளை எந்த பக்கம் இழுப்பது என்று பிரதான கட்சிகள் போட்டிபோட்டு வருகின்றன. புதிதாக கட்சி தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மக்களை நேரடியாக சந்திக்க சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். இதற்கிடையில்,…

Read More

மத்தியபிரதேசத்தில் கோல்ட்ரிஃப் இருமல் மருந்து குடித்து குழந்தைகள் பலியான விவகாரத்தில் 2 அல்லது 3 நாட்களில் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் இருபுறமும் பேருந்து நிறுத்தத்தை அகற்றி புதிய இழுவிசை கூரையிலான பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்கும் பணியினை இன்று காலை தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்ரமணியன் பேசுகையில், “கோல்ட்ரிஃப் இருமல் மருந்தில் நச்சுத்தன்மை கலப்பு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 1ஆம் தேதி இருமல் மருந்து குடித்த குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து, மத்திய பிரதேச அரசு தமிழகத்துக்கு இது குறித்து தகவல் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து மருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டு நச்சுத்தன்மை மற்றும் கலப்பு இருப்பது சோதனை செய்யப்பட்டு கண்டறிந்து மத்திய பிரதேச அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும்…

Read More

கடந்த நான்கு ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி 6 மடங்கு அதிகரித்துள்ளது என்று இதில் 50 சதவீதம் பெண்கள் தலைமை ஏற்று நடத்தும் தொழில் நிறுவனங்கள் தான் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புத்தொழில் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதில் 20க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து தொழில்துறையினர் உட்பட இந்தியா முழுவதும் இருந்து தொழில்துறையினர் பங்கேற்கும் 350 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அமைதியான சட்டஒழுங்கு இருக்கக்கூடிய மாநிலம் தமிழகம், அதனை தேடித்தான் தொழில்துறையினர் வருகிறார்கள். கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக பொறுப்பேற்ற காலங்களில், எண்ணற்ற தொழில் வளங்களை மேம்படுத்தி உள்ளதுடன், அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் தொழில்களை திமுக அரசு ஈர்த்துள்ளது. வரும் காலங்களில் 1.1 ட்ரில்லியன் டாலர் என்ற அளவில் முதலிடத்தில் இருக்க தமிழக அரசு திட்டம் வகுத்துள்ளது. உலகின் மிக முக்கிய புத்தொழில் நகரமாக தமிழகத்தை கட்டமைக்க முயற்சி எடுத்து…

Read More

வடசென்னையின் பிரபல தாதாவும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் A1-ம், ஆயுள் தண்டனை கைதியுமான ரவுடி நாகேந்திரன் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இவர் வடசென்னையின் பிரபல தாதா ரவுடி நாகேந்திரனின் மகன். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய போது, வடசென்னை தாதா நாகேந்திரனுக்கு ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. குறிப்பாக அஸ்வத்தாமன் வாங்கக்கூடிய மாமூல் இடங்கள், நிலத்தகராறு, கட்டப்பஞ்சாயத்து என அனைத்து தொழில்களிலும் ஆம்ஸ்ட்ராங் தலையிட்டதால், வேலூர் சிறையில் உள்ள பிரபல ரவுடியும், அஸ்வத்தாமனின் தந்தையுமான நாகேந்திரன் ஆம்ஸ்ட்ராங்கின்…

Read More

கோவை – அவிநாசி சாலையில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட மேம்பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தமிழ்நாட்டின் மிக நீண்ட மேம்பாலமாக கோவை – அவிநாசி சாலையில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கி.மீ. தூரத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இது இந்தியாவின் 3வது பெரிய தரைவழிப்பாலம் என்று கூறப்பட்டுள்ளது. மொத்தமாக 10 வழித்தடங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்ட மேம்பாலத்திற்கு ஜிடி நாயுடு என பெயர்சூட்டப்பட்டுள்ள நிலையில், இன்று காலை மேம்பாலம் திறக்கப்பட உள்ளது. மேம்லாபத்தை திறக்கும் பணிக்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் கோவை புறப்பட்டார். இந்த ஜிடி நாயுடு மேம்லாபத்தில் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளாவுக்கு ஒவ்வொரு பகுதியிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் பாதுகாப்பு சுவர்கள், ரோலர் தடுப்பு கருவிகள், உலக தரமான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மேம்பாலத்தின் மூலம் கோவை நகரில் இருந்து விமான நிலையத்திற்கு செல்லும் 10 கிலோ…

Read More

நள்ளிரவில் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அதிகாலையிலேயே அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டே உள்ளன. நேற்று நயன்தாரா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் அது புரளி என கூறப்பட்டது.இந்த நிலையில் நள்ளிரவில் சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருபப்தாக, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் அழைப்பு வந்துள்ளது. அதை தொடர்ந்து அதிகாலை விஜய் வீட்டிற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் விஜய் வீட்டை சோதனையிட முயன்றனர். அப்போது உறங்கி கொண்டிருக்கிறார் என்றும், அவர் எழுந்திருக்க 7 மணி ஆகும் என வீட்டின் காவலாளி கூறியதால் போலீசார் விஜய் வீட்டின் முன்பு காத்திருந்தனர். பின்னர் 7.05 மணிக்கு விஜய் வீடிற்குள் நுழைந்த வெடிகுண்டு நிபுரணர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர். பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. இதேபோல்…

Read More

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களிடம் 2வது நாளாக தவெக தலைவர் விஜய் வீடியோ கால் மூலம் பேசினார். கடந்த 27ம் தேதி கரூரில் நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு பலரும் ஆறுதலையும், கருத்துகளையும் கூறிவந்தனர். கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது அங்கிருந்து புறப்பட்டு சென்னை வந்த விஜய் யாரிடமும் பேசாமல் அமைதி காத்தார். தொடர்ந்து அமைதியாகவே இருந்த விஜய் வீடியோ மூலம் பேசியதுடன், தற்போது வீடியோ கால் மூலமாக கரூர் மக்களுடன் பேசி வருகிறார். சம்பவம் நடந்து 12 நாட்கள் கடந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துடன் வீடியோ கால் மூலம் விஜய் பேசியுள்ளார். காவல்துறை அனுமதி கிடைத்ததுடன் நேரில் வந்து சந்திப்பதாகவும் விஜய் தெரிவித்துள்ளார். கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக விஜய் பேசவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில் விஜய் வீடியோ காலில் பேசி…

Read More

நயன்தாரா மற்றும் கவின் இணைந்து நடிக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல், வளர்ந்து வரும் இளம் ஹீரோவாக திகழும் கவினின், சமீபத்தில் வெளியான ‘கிஸ்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், நயன்தாரா மற்றும் கவின் இருவரது நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை விஷ்ணு எடவன் இயக்கி வருகிறார். ஜென் மார்டின் இசையமைப்பாளராகவும், பிலோமின்ராஜ் படத் தொகுப்பாளராகவும், ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. படத்தின் கேப்சனில் “அனைத்து உரையாடல்களும் சின்னதாக, சிம்பிளாக Hi 🙂 ல் இருந்துதான் ஆரம்பிக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

6 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டது, குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு கருப்பு நாள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தஷ்வந்த் என்ற இளைஞருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனை மற்றும் 46 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து அவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மனித மிருகங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு நீதி பெற்றுத் தருவதில் நாம் எந்த அளவுக்கு வலிமையற்று இருக்கிறோம் என்பதற்கு இந்த வழக்கு வேதனையான எடுத்துக்காட்டு ஆகும். வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தததுடன், தடயங்களை அழிக்கும் நோக்குடன் சிறுமியின் உடலையும் எரித்ததாக அதேபகுதியைச் சேர்ந்த தஷ்வந்த்…

Read More

மழைக்காலம் நம் வாழ்வில் வளம் தரும் காலமாக இருக்கட்டுமே அன்றி, நோய்களை உருவாக்கும் காலமாக மாறக்கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது குறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, திருவள்ளூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், மக்கள் உடல்நலம் குறித்து மிகுந்த கவலை தருகிறது. மழைக்காலம் தொடங்கியுள்ள இந்நேரத்தில், டெங்கு தொற்றைத் தடுக்க விழிப்புணர்வு மிக அவசியமானதாகும். இந்த நோயை எதிர்கொள்வதில் ஒவ்வொருவரும் மிகுந்த பொறுப்புடன் செயலாற்ற வேண்டும். நமது வீடு மற்றும் அதன் சுற்றுப்புறம் சுத்தமாக இருப்பது மட்டுமே டெங்கு பரவலைத் தடுக்கும் முக்கியமான முன்னெச்சரிக்கை வழியாகும். வீடுகளின் அருகே தண்ணீர் தேங்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தொட்டிகள், பழைய டயர்கள், பூந்தொட்டிகள், பிளாஸ்டிக் வாளிகள் மற்றும் திறந்த பாட்டில்கள் போன்றவற்றில் நீர் தேங்கியிருந்தால் உடனே அகற்ற வேண்டும். குடிநீர் தொட்டிகளைப் பாதுகாப்பாக மூடி…

Read More