Close Menu
    What's Hot

    வரும் 18ல் ‘தனுஷ் 55‘அப்டேட்!

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோல்ட்ரிஃப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை! – அமைச்சர் உறுதி
    தமிழ்நாடு

    கோல்ட்ரிஃப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை! – அமைச்சர் உறுதி

    Editor TN TalksBy Editor TN TalksOctober 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Ma Subramanian e1760337375794
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மத்தியபிரதேசத்தில் கோல்ட்ரிஃப் இருமல் மருந்து குடித்து குழந்தைகள் பலியான விவகாரத்தில் 2 அல்லது 3 நாட்களில் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் இருபுறமும் பேருந்து நிறுத்தத்தை அகற்றி புதிய இழுவிசை கூரையிலான பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்கும் பணியினை இன்று காலை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்ரமணியன் பேசுகையில், “கோல்ட்ரிஃப் இருமல் மருந்தில் நச்சுத்தன்மை கலப்பு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 1ஆம் தேதி இருமல் மருந்து குடித்த குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து, மத்திய பிரதேச அரசு தமிழகத்துக்கு இது குறித்து தகவல் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து மருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டு நச்சுத்தன்மை மற்றும் கலப்பு இருப்பது சோதனை செய்யப்பட்டு கண்டறிந்து மத்திய பிரதேச அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் புதுச்சேரி மற்றும் கர்நாடக அரசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால், மத்திய அரசும், மத்திய பிரதேசும் இந்த மருந்தில் தப்பு இல்லை என விட்டுவிட்டார்கள். ஆனால் நாம் தான் இதனை உறுதி செய்து 3ஆம் தேதியில் இருந்து இந்த மருந்து உற்பத்திக்கு தடை விதித்தோம். க்ளோசர் ஆர்டரும் கொடுத்துவிட்டோம். கடந்த ஏழாம் தேதி அதனுடைய உரிமையாளருக்கு கிரிமினல் நடவடிக்கை நோட்டீஸ் வழங்க எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் ஆளில்லாத காரணத்தால் நோட்டீஸ் ஒட்டப்பட்டு நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் உரிமையாளரை அழைத்து நிறுவனத்திற்கு சென்று விசாரணை நடத்தி நச்சுத்தன்மை குறித்து அடுத்த கட்ட நகர்வாக நிரந்தரமாக மூடப்படும். அந்த நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிவெடுப்போம். கடந்த இரண்டு ஆண்டுகளாக சீனியர் மருந்து ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.

    Childrens deaths Coldrif cough medicine Ma subramanian Production company குழந்தைகள் பலி கோல்ட்ரிஃப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் மா.சுப்பிரமணியன்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதொழில் வளர்ச்சி 6 மடங்கு அதிகம்; 50% நிறுவனங்கள் பெண்கள் தலைமையில்… மு.க.ஸ்டாலின் பெருமிதம்
    Next Article அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை – தவெக உறுதி என தகவல்
    Editor TN Talks

    Related Posts

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    June 15, 2026

    பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்த வழக்கு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    June 15, 2026

    வரும் 18ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர்: எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி நாளை தொடக்கம்!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வரும் 18ல் ‘தனுஷ் 55‘அப்டேட்!

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்த வழக்கு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.