Author: Editor TN Talks
கரூர் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம், தவெக தலைவர் விஜய் வீடியோ காலில் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் வேலாயுதம்பாளையத்தில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளில் கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்றனர். ஆளும் திமுக தரப்பினரும், தவெக தரப்பினரும் மாறி, மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர். தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை என தொடர்ச்சியாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதற்கிடையில், விஜய் கரூர் செல்லும்போது எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படாத வகையில்,…
மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளதாகவும், இந்தியாவிலேயே 11.19% பொருளாதார வளர்ச்சியோடு இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) சார்பில் இன்று முதல் 3 நாட்கள் வரை நடைபெறும் “AeroDefCon25” கண்காட்சி மற்றும் கருத்தரங்கை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், “வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் துறை சார்ந்த இந்த மாநாட்டை தமிழ்நாட்டில் முதல்முறையாக தொடங்கி வைத்துள்ளதாகவும், அனைத்து விதமான வளர்ந்து வரும் தொழில்களையும் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் அடையாளம் தான் இந்த மாநாடு. மின்னணு பொருட்கள் ஏற்றுமதியிலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளதாக கூறிய அவர், இந்தியாவிலேயே 11.19% பொருளாதார வளர்ச்சியோடு இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழில் துறை இடம்பெற்றிருக்கும் நகரங்களில் பல தொழில்…
இனிவரும் காலங்களில் கரூர் சம்பவம் போன்று நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பும், என் பொறுப்பும் தான் என்று நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேற்று முன்தினம் (05-10-25) இரவு அப்போலோ மருத்துவமனையில் திடீரெனெ அனுமதிக்கப்பட்டார். மாதம் மாதம், பரிசோதனை மேற்கொள்வதற்காக அப்போலோ மருத்துவமனைக்கு செல்லும் ராமதாஸ், இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. மேலும், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான நடிகர் கமல்ஹாசன், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் மருத்துவர் ராமதாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “பாமக நிறுவனர் ராமதாசை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க வந்தேன் நலம் விசாரிப்பதற்கு முன்பே நல்ல செய்தி வந்தது.இன்று மாலை அவர் சிகிச்சை முடிந்து இல்லம்…
சிலம்பரசன், வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படத்திற்கு ‘அரசன்’ என பெயர் சூட்டப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் சிலம்பரசன் (STR) மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படம் ‘STR 49’ என்று குறிப்பிடப்பட்டு வந்தது. கேங்ஸ்டர் சம்பந்தமான இந்த திரைப்படத்தின், படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக புரோமோ விடீயோ வெளியாகாமல் உள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கான தலைப்பு ’அரசன்’ என தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதோடு, ‘அரசன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியது. போஸ்டரில் சிலம்பரசன் இரத்தத்தால் நனைந்த சட்டையுடன் காட்சியளிக்கிறார். அவர் கையில் கத்தியை ஏந்தி, ஒரு சைக்கிளுக்கு அருகில் நிற்பது போன்ற தோற்றம் அமைந்துள்ளது. இந்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமதாஸ் ஐசியூவில் இருப்பதால் பார்க்கமுடியவில்லை என அன்புமணி தெரிவித்த சில நிமிடங்களில், நேரில் சந்தித்த புகைப்படத்தை ஜி.கே.மணி வெளியிட்டது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேற்று முன்தினம் (05-10-25) இரவு அப்போலோ மருத்துவமனையில் திடீரெனெ அனுமதிக்கப்பட்டார். மாதம் மாதம், பரிசோதனை மேற்கொள்வதற்காக அப்போலோ மருத்துவமனைக்கு செல்லும் ராமதாஸ், இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. மேலும், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியது. இதனையடுத்து, மருத்துவர் ராமதாஸின் மகனும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் நேற்று திங்களன்று மருத்துவமனை மருத்துவர்களை சந்தித்து, ராமதாஸுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அவர் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, “அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று இருதய மருத்துவ நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும், அவர் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அவர் ஐ.சி.யூவில் இருப்பதால் அவரை பார்க்க முடியவில்லை” என்று…
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி வயது முதிர்வு காரணமாக சென்னையில் உயிரிழந்தார். சட்டமன்ற தேர்தல் காரணமாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார். நேற்று கிருஷ்ணகிரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் தவெக கட்சியை விமர்சித்து பேசி வந்தார். தொடர்ந்து தேமுதிக பொதுக்கூட்டம் மற்றும் பிரச்சாரம், தேர்தல் பணிகளில் பிரேதமலதா விஜயகாந்த் ஈடுபட்டு வரும் சூழலில், அவருக்கு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சென்னையில் உள்ள அவரது தாயார் அம்சவேணி திடீரென உயிரிழந்துள்ளார். வயது முதிர்வு காரணமாக உயிரிழந்ததாக சொல்லப்படும் நிலையில், பிரேமலதா விஜயகாந்தின் தாய் உடல் சாலி கிராமத்தில் உள்ள சுதீஷ் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தாய் இறந்த செய்தி கேட்ட பிரேமலதா தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பியுள்ளார். அம்சவேணியின் இறுதி ஊர்வலம் விருகம்பாக்கம் இல்லத்தில் இருந்து நாளை மதியம் 1 மணி அளவில் தொடங்கி வடபழனி ஏவிஎம் மின்மயானத்தில்…
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் ராமதாஸின் உடல்நலம் குறித்து தொலைபேசி மூலம் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமதாஸிற்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பாமகவில் பரபரப்பு ஏற்பட்டது. ராமதாஸிற்கு ஆஞ்சியோ செய்யப்பட்டதாகவும், இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் எந்த அடைப்பும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து இரு நாட்கள் ராமதாஸ் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமதாஸின் உடல் நலம் குறித்து தொலைபேசி மூலமாக நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். முன்னதாக நேற்று அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், ராமதாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து ராமதாஸின் உடல்நலன் குறித்து அரசியல் தலைவர்கள் நலம் விசாரித்து வருவதுடன் அவர் விரைவில் குணமடைய…
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய அதிமுக மற்றும் தவெக பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூரில் கடந்த 27ம் தேதி நடந்த தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு திமுக தான் காரணம் என தவெகவினர் குற்றம்சாட்டினர். இதேபோல் தவெகவின் மீது பல்வேறு அரசியல் கட்சிகளும் குற்றம்சாட்டி வந்தனர். இந்த சூழலில் கரூர் சம்பவம் தொடர்பாக அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கரூர் சம்பவம் தொடர்பாக கருத்து பதிவிட்ட 4பேர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட அதிமுகவை சேர்ந்த சசி என்ற சசிகுமார், தவெகவை சேர்ந்த கண்ணன், கிருஷ்ணகிரியை சேர்ந்த டேவிட், தூத்துக்குடியை சேர்ந்த அந்தோணி சகாய மைக்கேல் ராஜ் ஆகியோர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். புகாரை விசாரித்த நீதிபதி 4பேரையும்…
கரூரில் நடந்த துயர சம்பவத்துக்கு பிறகு தமிழகம் முழுவதும் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தவும், தொண்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் இரண்டாம் கட்ட தலைவர்கள் பட்டியலை விஜய் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 27ம் தேதி கரூர் பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவத்திற்கு பிறகு தவெக கட்சியில் பல அதிரடி மாற்றங்களை விஜய் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி பெரும் கூட்டம் கூடினால் மக்களை கட்டுப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் மற்ற கட்சிகளை போல் தொண்டர்கள் படையை உருவாக்க வேண்டும் என நினைத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தொண்டர்கள் படை தவெகவின் கட்சி கூட்டம் எங்கெல்லாம் நடக்கிறதோ, பேரணி எங்கெல்லாம் நடக்கிறது அங்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது, பணிகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. தவெக சார்பில் தொண்டர் படை அமைத்து பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது கரூர் சம்பவத்திற்கு…
செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு தலையில் காயத்துடன் வந்த குடிபோதையில் இளைஞர் செய்த அட்ராசிட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன் செங்கல்பட்டு அருகே உள்ள தனியார் நிறுவத்தில் கடுமான பணிகளை செய்து வருகிறார். நேற்று மாலை செங்கல்பட்டு அருகே தனியார் நிறுவனத்தில் கட்டுமான பணிகளை முடித்துவிட்டு, வெளியே சென்ற பிரபாகரன் சக நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். பின்னர், அவர் தங்கி உள்ள அறைக்கு சென்றுபோது கால் இடறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் மது போதையில் கீழே விழுந்து உள்ளார் அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மருத்துவமனையில் இவர் அதிக அளவில் குடித்து உள்ளதால் என்ன செய்வது என்று தெரியாமல் மருத்துவர்கள் திணறி உள்ளனர். பின் மருத்துவமனையை விட்டு வெளியே ஓடி வந்த பிரபாகரன் அருகில் உள்ள ஒரு குட்டையில் குதித்துள்ளார். இவரது…