Author: Editor TN Talks
பீகார் மாநிலத்தில் உள்ள 243 தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பீகார் மாநிலத்தின் சட்டசபை பதவிக்காலம் நவம்பர் 22ம் தேதியுடன் முடியும் நிலையில், அடுத்த தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், பீகாரில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். முதர்கட்ட தேர்தல் நவம்பர் 6ம் தேதி நடைபெறும் என்றும், அக்டோபர் 16ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 17ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள், அக்டோபர் 18ம் தேதி வேட்பு மனு மீது பரிசீலனை, அக்டோபர் 20ம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட தேர்தல் அக்டோபர் 13ம் தேதி தொடங்கும் என்றும் அக்டோபர் 20ம் தேதி வேட்பு…
பீகார் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி அரசின் பதவிக்காலம் நவம்பர் மாதம் 22ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது. அதன்படி இன்று மாலை 4.00 மணியளவில் தேர்தல் ஆணையம் தேர்தல் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டது. அதன்படி, முதற்கட்ட தேர்தலுக்கான, வேட்பு மனு தாக்கல் அக்டோபர் 10ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுவுக்கான இறுதி நாள் அக்டோபர் 17ஆம் என தேதியாக நிர்ணயம் செய்துள்ளது. மேலும், அக்டோபர் 18ஆம் தேதி வேட்ப மனுக்கள் பரிசீலனையும், அக்டோபர் 20ஆம் தேதி வேட்பமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகவும் அறிவித்துள்ளது. நவம்பர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, நவம்பர் 14ஆம்…
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசிய வழக்கறிஞரை போலீசார் பிடித்து சென்றனர். விஷ்ணு சிலை புதுப்பிப்பு குறித்த வழக்கை விசாரித்த கவாய் கருத்து கூறிய நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது காலணி வீசப்பட்டது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது கலாணி வீசப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ”உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் அவர்கள் சனாதன தர்மத்திற்கு எதிராக இருப்பதாக கூறி அவர்மீது காலணியை வீசிய சமூகவிரோதியின் வன்முறைச் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றேன். ஒரு ஜனநாயக நாட்டில் எந்தவித கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவற்றை வாத–பிரதிவாதங்கள், சட்டரீதியான வழிமுறைகள் மற்றும் அமைதியான முறைகளால் எடுத்துரைப்பது தான் நாகரிகமான நடைமுறை. நீதித்துறையின் தலைமைப் பொறுப்பில் உள்ள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியை குறிவைத்து இப்படிப்பட்ட அநாகரீக செயல் நடப்பது என்பது, நீதித்துறையின் சுதந்திரத்தையும், மாண்பையும்…
உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக தலைவர் ராமதாஸை சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் நலம் விசாரித்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய சிகிச்சை நிபுனர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையில் உள்ள ராமதாஸை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். அவருடன் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதேபோல் அப்போலோ மருத்துவமனையில் உடல நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் வைகோவையும் முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
இஸ்ரேல் நிறுவனங்களின் வணிக நிகழ்வுக்கு எவ்வித ஒத்துழைப்பையும் வழங்கக் கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல் அரசு தொடர்ந்து நிகழ்த்தி வரும் மனிதாபிமானமற்ற கொடூரமான வான்வழி உள்ளிட்ட பல்வேறு முனைகளில் தாக்குதலுக்கு பாலஸ்தீன மக்கள் இரையாகி வருவது அனைவரது மனதையும் பதற வைக்கிறது. இத்தாக்குதலினால் ஆயிரக்கணக்கான மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் படுகொலை செய்யப்படுவது குறித்து இஸ்ரேல் கவலைப்படுவதாக தெரியவில்லை. பாலஸ்தீன மக்களுக்காக மறைந்த அதிபர் யாசர் அராபத்துக்கு ஆதரவாக மறைந்த பிரதமர் இந்திரா காந்தி உள்ளிட்டவர்கள் ஆதரவு வழங்கி வந்தார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். இந்நிலையில் பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அரசு நடத்தி வரும் மனித நாகரீகமற்ற இன அழிப்பு நடவடிக்கைகளினால் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் கூட தப்பவில்லை. இத்தகைய கொடூரமான தாக்குதல் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள்…
சமூக வலைதளங்களில் யாரையும் விட்டு வைக்காமல் விமர்சிக்கின்றனர் என்றும், உத்தரவுகளை பிறப்பித்ததற்காக நீதிபதிகளும் விமர்சிக்கப்படுகின்றனர் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் தெரிவித்துள்ளார். சமையல் கலை நிபுணரும், திரையுலக பிரமுகருமான மாதம்பட்டி ரங்கராஜ் அனைவராலும் அறியப்பட்டவர். அவரது பாரம்பரிய உணவுகள் பொதுமக்கள் மத்தியிலும், சமையல் ஆர்வலர்களுக்கு மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் இல்ல விழாக்களில் சமையல் செய்து பெரும் பிரபலமடைந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த மாதம்பட்டி ரங்கராஜ், ‘பென்குயின்’ படத்திலும் நடித்தார். தொடர்ந்து, சின்னத்திரையான விஜய் டி.வி.யில் வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி ஸ்ருதி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவை திருமணம் செய்து கொண்டார். ஜாய்…
கரூர் கூட்ட நெரிசல் வழக்குகளில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பிய கண்ணன், டேவிட், சசி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், அரசு தரப்பில் தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதற்கிடையில், கரூர் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சமூக வலைத்தளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பதிவுகள் பதிவிடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு தரப்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த செய்திக் குறிப்பில், ‘கரூர் பகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்ட நெரிசல் விபத்து…
கரூரில் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து 2ஆம் நாளக ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்த உள்ளனர். கரூர் வேலாயுதம்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உள்ளது. மேலும் பலர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு ஒருங்கிணைந்த விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளது. இந்நிலையில், விபத்து தொடர்பாக ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை (அக்-05) கரூர் துயர நிகழ்வு குறித்து, சம்பவம் நடந்த இடத்தில், சிறப்பு புலனாய்வு குழு தங்கள் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். இன்று 2ஆம் நாளாக கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை…
மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் நடந்தவை குறித்து விளக்கம் அளிக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்ததாக கரூர் விவகாரம் தொடர்பாக பாஜக எம்.பிக்கள் குழுவின் அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் வேலாயுதம்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உள்ளது. மேலும் பலர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு ஒருங்கிணைந்த விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளது. இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பின் பேரில் ஒருங்கிணைப்பாளர் ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதன் பேரில், பாஜக எம்.பி.க்கள் ஹேமமாலினி, அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால் (முன்னாள் டிஜிபி), ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவ சேனா), அப்ரஜிதா சாரங்கி, ரேகா…
தமிழ் சின்னத்திரை வரலாற்றில் பெரும் வரவேற்பையும் அதேசமயத்தில் சர்ச்சைகளையும் ஏற்படுத்திய நிகழ்ச்சி பிக்பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இதன் முதல் 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். கடந்த ஆண்டு இதன் 8-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதன் 9-வது சீசன் இன்று (05/10/2025) தொடங்கி உள்ளது. விஜய் சேதுபதியே தொகுத்து வழங்குகிறார். இந்தமுறை ஒண்ணுமே புரியலையே என்ற Tagline உடன் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. இதில் மொத்தம் 20 பேர் பங்கேற்றுள்ளனர். முழுக்க சினிமாவில் இருப்பவர்கள் அல்லது சினிமாவுக்குள் செல்ல முயல்பவர்கள் என்ற இரண்டு பிரிவில் தான் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வாட்டர் மெலன் ஸ்டார் என்று வலம்வந்த வம்படி பேர்வழி திவாகர் முதல் போட்டியாளராக வந்ததுமே என்ன மாதிரியான நபர்களை தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. அடுத்தபடியாக பலூன் அக்கா என அறியப்படும் அரோரா சின்க்ளேர் இடம்பெற்றுள்ளார்.…