Close Menu
    What's Hot

    காவிரி பெருக்கு..!! தமிழகத்திற்கு கைகொடுத்த இயற்கை.. தணிந்த அரசியல் சூடு!

    தண்ணீர் இன்றி மணல் மேடான அமராவதி ஆறு! ஆடி 18-ல் புனித நீராட முடியாமல் தவிக்கும் மக்கள்!

    வறண்டு காணப்படும் மிருகண்டா அணை !. ஆக்சிஜன் பற்றாக்குறையால் செத்து மிதக்கும் மீன்கள்! விவசாயிகள் கவலை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»‘மாவட்ட நிர்வாகத்தினர் எங்களை சந்திக்கவில்லை’ – கரூர் விவகாரத்தில் பாஜக எம்.பிக்கள் குழு அறிக்கை!
    தமிழ்நாடு

    ‘மாவட்ட நிர்வாகத்தினர் எங்களை சந்திக்கவில்லை’ – கரூர் விவகாரத்தில் பாஜக எம்.பிக்கள் குழு அறிக்கை!

    Editor TN TalksBy Editor TN TalksOctober 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Hema Malini
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் நடந்தவை குறித்து விளக்கம் அளிக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்ததாக கரூர் விவகாரம் தொடர்பாக பாஜக எம்.பிக்கள் குழுவின் அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கரூர் வேலாயுதம்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உள்ளது. மேலும் பலர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு ஒருங்கிணைந்த விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்து உள்ளது. இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பின் பேரில் ஒருங்கிணைப்பாளர் ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    அதன் பேரில், பாஜக எம்.பி.க்கள் ஹேமமாலினி, அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால் (முன்னாள் டிஜிபி), ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவ சேனா), அப்ரஜிதா சாரங்கி, ரேகா ஷர்மா, புட்ட மகேஷ் குமார் (தெலுங்கு தேசம் கட்சி) ஆகிய 8 பேர் கொண்ட குழு சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டது.

    மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக 8 உறுப்பினர்களைக் கொண்ட குழு துயரச் சம்பவ இடத்தைப் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினரையும் சந்தித்தது. பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு அங்கு நடந்த சம்பவங்கள் தொடர்பாக ஆய்வு செய்தனர்.

    இது தொடர்பான அறிக்கையை நேற்று தேசிய தலைமையிடம் எம்பிக்கள் குழு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் கரூர் சம்பவத்திற்கு முறையாக திட்டமிடாத மாவட்ட நிர்வாகமும் அரசும் தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளதாக தெரிகிறது.

    மேலும், மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் யாரும் தங்களை சந்தித்து, நடந்தவை குறித்து விளக்கம் அளிக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்ததாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் அரசு அதிகாரிகள் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    accident BJP MP group Karur Stampede Study TVK Vijay ஆய்வு கரூர் கூட்ட நெரிசல் தவெக பாஜக எம்.பிக்கள் குழு விபத்து விஜய்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிக்பாஸ் சீசன் – 9 ; சினிமாவும், சினிமா சார்ந்தும்..
    Next Article தவெக மா.செ. மதியழகன், காவல் அதிகாரிகளிடம் விசாரணை! – சிறப்பு புலனாய்வு குழு திட்டம்
    Editor TN Talks

    Related Posts

    காவிரி பெருக்கு..!! தமிழகத்திற்கு கைகொடுத்த இயற்கை.. தணிந்த அரசியல் சூடு!

    August 3, 2026

    தண்ணீர் இன்றி மணல் மேடான அமராவதி ஆறு! ஆடி 18-ல் புனித நீராட முடியாமல் தவிக்கும் மக்கள்!

    August 3, 2026

    வறண்டு காணப்படும் மிருகண்டா அணை !. ஆக்சிஜன் பற்றாக்குறையால் செத்து மிதக்கும் மீன்கள்! விவசாயிகள் கவலை!

    August 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காவிரி பெருக்கு..!! தமிழகத்திற்கு கைகொடுத்த இயற்கை.. தணிந்த அரசியல் சூடு!

    தண்ணீர் இன்றி மணல் மேடான அமராவதி ஆறு! ஆடி 18-ல் புனித நீராட முடியாமல் தவிக்கும் மக்கள்!

    வறண்டு காணப்படும் மிருகண்டா அணை !. ஆக்சிஜன் பற்றாக்குறையால் செத்து மிதக்கும் மீன்கள்! விவசாயிகள் கவலை!

    கனிம விற்பனையில் புதிய நடைமுறை.. கூடுதல் கட்டணத்திற்கு தமிழக அரசு அனுமதி..!!

    இன்று காஞ்சிபுரம் செல்கிறார் முதல்வர் விஜய்… தனியார் தொழிற்சாலைகளில் நேரடி ஆய்வு!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.