நடிகர் சிம்பு மாநாடு, பத்து தல, வெந்து தணிந்தது காடு என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான தக் லைஃப் திரைப்படம் வெற்றியடையவில்லை என்றாலும் கூட, சிம்புவின் நடிப்பு பாராட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது 49-வது படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
இந்த அறிவிப்பு வெளியானது முதல் இருவரது ரசிகர்களும் கொண்டாட்டத்தில் உள்ளனர். இயக்குநர் வெற்றிமாறனும் விடுதலை படத்திற்கு பிறகு அடுத்த படைப்பிற்கு தயாராகி வருகிறார். வடசென்னையை மையப்படுத்தி கேங்ஸ்டர் கதையாக இப்படம் உருவாகவுள்ளது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியதாக, புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
இந்த நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் படத்தில், சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு அடுத்தவாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.