கலைப்புலி எஸ் தானுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் அரசன் திரைப்படத்தின் ஷூட்டிங் எப்பொழுது தொடங்கும் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வண்ணம் இருந்தது. அந்தக் கேள்விக்கு நடிகர் சிம்பு சற்று முன்னர் பதிலளித்திருக்கிறார்.
மலேசியாவுக்கு தனியார் நிகழ்ச்சிக்காக சென்றிருந்த சிம்பு அங்கே ரசிகர்கள் மத்தியில் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். டிசம்பர் 9ஆம் தேதி மதுரையில் உள்ள கோவில்பட்டியில் அரசன் திரைப்பட சூட்டிங் துவங்க இருப்பதாகவும், மலேசியாவில் இருந்து நேராக அரசன் திரைப்படம் ஷூட்டிங்கிற்கு தான் செல்ல போகிறேன் என்றும் சிம்பு அறிவித்திருக்கிறார்.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்க இருக்கும் இந்த அரசன் திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து விஜய் சேதுபதி ஒரு முக்கிய இடத்தில் நடிக்க இருக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் பல்வேறு முக்கிய நட்சத்திரங்கள் நடிக்க இருக்கின்றனர் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
இந்த திரைப்படம் வடசென்னை திரைப்பட உலகில் கனெக்ட் ஆகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
