தனுஷ் மற்றும் அவரது மேலாளர் ஸ்ரேயஸ் குறித்து தவறான செய்திகள் பரப்பப்படுவதாகவும், தனது கருத்து திரித்துக் கூறப்பட்டுள்ளதாகவும் நடிகை மான்யா ஆனந்த் விளக்கமளித்துள்ளார்.
சின்னத்திரையில் ‘வானத்தைப் போல’, ‘அன்னம்’, ‘மருமகள்’ போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மான்யா ஆனந்த். அண்மையில் இவர் அளித்த பேட்டி சர்ச்சைக்குள்ளாகி, வைரலானது. தனுஷ் தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி, தன்னை தொடர்பு கொண்ட நபர், தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டதாக குறிப்பிட்டார். அந்த படத்தில் நடிக்க, அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என அவர் கூறியதாக மான்யா பேசியது பேசு பொருளானது.
இந்தநிலையில், தனது கருத்து திரித்துக் கூறப்பட்டுள்ளதாக மான்யா விளக்கம் அளித்துள்ளார். அதில், தனுஷின் மேலாளர் என ஒருவர் தன்னை அணுகியதாகவும், ஆனால், அது அவரா அல்லது தன்னை ஏமாற்ற வேறு யாரேனும் அவ்வாறு செய்தார்களா என தெரியவில்லை என மான்யா குறிப்பிட்டுள்ளார். தன்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் நடிகை மான்யா ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
