Author: Editor TN Talks
சீமானும், விஜய்யும் ஆர்எஸ்எஸ் கையாள் என்பது அம்பல மாகியுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியுள்ளார். மதுரை பழங்காநத்தத்தில் நேற்று விசிக சார்பில் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் பிரச்சினை தொடர்பாக மத நல்லிணக்கத்தை பாதுகாக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை வகித்து பேசியதாவது: தமிழகத்தில் எத்தனையோ மக்கள் பிரச்சினைகள் உள்ளன. இதற்கு பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து அமைப்புகள், சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராடியிருக்கிறார்களா? தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள் பிரச்சினைகள் பற்றி நாங்கள் திமுக கூட்டணியிலிருந்தாலும் எதிர்த்து பேசுகிறோம். பாஜக ஆட்சியில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப் பில்லை. ஓட்டுகளை பெறுவதற்காக நான் கவலைப்படப்போவதில்லை. கலங்கியதும் இல்லை. திருமாவளவன் இப்படி பேசுகி றாரே என திமுக நினைத்தால்கூட அதைப்பற்றியும் கவலைப்படவில்லை. மொழிக்காக, இனத்துக்காக தீக்குளித்தவர்கள் உண்டு. ஆனால் மதவெறியை தூண்டி பூரணசந்திரன் தீக்கு ளிக்க வைத்தது ஆர்எஸ்எஸ் கும்பல். இந்துக்களை…
தவெக’வில் பதவி கிடைக்காமல் போன விரக்தியில், அக்கட்சியின் தலைவர் விஜய்யின் காரை மறித்து கண்ணீர் மல்க போராடிய பெண் நிர்வாகியால் பனையூரில் பரபரப்பு நிலவியது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் தற்போது மாவட்டச் செயலாளர்கள் நியமனம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் நெருங்கி வருவதையடுத்து நிர்வாகிகளை நியமிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ள சூழலில் தான், நீண்ட நாட்களாகக் கோரப்பட்டு வந்த மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கான அறிவிப்புகள் இன்று வெளியாகத் துவங்கியுள்ளன. அதனடிப்படையில், தூத்துக்குடி மற்றும் திருச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய 8 மாவட்டச் செயலாளர் பணியிடங்களுக்குப் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதில், தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் பதவி சாமுவேல் என்பவருக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதிருப்தி அடைந்த தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளரான அஜிதா ஆக்னல் தனது ஆதரவாளர்களுடன் பனையூர் அலுவலகத்துக்கு வந்து…
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் 42 வது மண்டல பூஜை விழாவையொட்டி நடைபெற்ற அன்னதானத்தை அதிமுக முன்னாள் எம்பி சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் நடத்தும் 42வது மண்டல பூஜை விழா நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.பி சௌந்தர ராஜன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற அன்னதானத்தையும் சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, முன்னாள் கவுன்சிலர் சுரேஷ்குமார், துரைசாமி, நம்பிராஜன், குருசாமி முருகன், அதிமுக நிர்வாகிகள் அம்பிகாபதி, வினேஷ் ராஜா, முருகேசன், ராஜேஷ், நாராயணன், முருகராஜ், தர்மலிங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள், ஐயப்ப பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
2025-ம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘துரந்தர்’. ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘துரந்தர்’. இப்படம் வெளியாகி 18 நாட்கள் ஆகும் நிலையில், இந்திய அளவில் மட்டும் ரூ.700 கோடியை கடந்துள்ளது. முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் பாராட்டினால் திரையரங்குகளில் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போது 2025-ம் ஆண்டில், உலக அளவில் அதிக வசூல் செய்த இந்திய படம் என்ற மாபெரும் சாதனையை ‘துரந்தர்’ நிகழ்த்தியிருக்கிறது. முதல் இடத்தில் இருந்த ‘காந்தாரா – சாப்டர் 1’ படத்தின் வசூலை முறியடித்திருக்கிறது. இதுவரை உலகளவில் மொத்த வசூலில் ரூ.900 கோடியை கடந்திருக்கிறது. இதனால் படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ’துரந்தர்’ ஸ்பை த்ரில்லர் வகை படமாகும். உளவு அதிகாரியை பற்றிய கதயைக் கொண்டது. 1999-ம் ஆண்டு கந்தகரில் இந்திய விமானம் கடத்தப்பட்டது. அடுத்த 2 ஆண்டுகளில் டெல்லி நாடாளுமன்றத்தின் மீது…
அனைத்து வடிவ கிரிக்கெட் விளையாட்டுகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக இந்திய ஆல் ரவுண்டர் கிருஷ்ணப்பா கவுதம் அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடிய ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்பா கவுதம். கர்நாடகாவைச் சேர்ந்த கவுதம், 2017ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அந்த தொடரில் அவருக்கு எந்தவொரு போட்டியிலும் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் அந்த தொடருடன் அவர் அணியில் இருந்தும் நீக்கப்பட்டார். பின்னர் கடந்த 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார். அந்த தொடரில் அவர் 15 போட்டிகளில் விளையாடி 126 ரன்களையும், 11 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இருப்பினும் அவரது பேட்டிங் ஸ்டிரைக் ரேட் 196.87ஆகவும், பவுலிங் எகானமி 7.80 ஆகவும் இருந்ததால், அதே ஆண்டு இந்திய பி அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார். ஆனால் அடுத்த சீசனில் அவர் 7 போட்டிகளில்…
ஜெர்மனி சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதன் தலைநகர் பெர்லினில் உள்ள ஹெர்டி பள்ளியில் பேசுகையில், பாஜக இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த முயற்சிப்பதாகக் கூறியது சர்ச்சையாகியுள்ளது. பெர்லின் நகரின் ஹெர்டி பள்ளியில், மாணவர்கள் மத்தியில் சுமார் 1 மணி நேரம் ராகுல் காந்தி பேசிய வீடியோவை காங்கிரஸ் கட்சி அதன் அதிகாரபூர்வ சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் ராகுல் காந்தி பேசியதாவது: இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய ஜனநாயகம் இந்த உலகுக்கே ஒரு சொத்து எனலாம். அப்படியிருக்க இந்திய ஜனநாயக அமைப்பு மீதான தாக்குதல் சர்வதேச ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். பாஜக அடிப்படையில் என்ன செய்ய விழைகிறது என்றால், இந்திய அரசமைப்பை முற்றிலுமாக அப்புறப்படுத்த முயற்சிக்கிறது. மாநிலங்களுக்கு இடையேயான சமத்துவத்தை அழிக்க நினைக்கிறது. மொழிகள், மதங்களுக்கு இடையேயான சமத்துவத்தை ஒழிக்க நினைக்கிறது; இந்திய அரசமைப்பின் மையப் புள்ளியை சிதைக்க நினைக்கிறது. ஜனநாயக அமைப்பின்…
சிவ ராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி நடித்துள்ள படம், ‘45’. இசை அமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இயக்கியுள்ள இப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் ஜன.1-ம் தேதி வெளியாகிறது. சுராஜ் புரொடக் ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரித்துள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது. இதன் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. நடிகர் விஜய் ஆண்டனி, வின்சன்ட் அசோகன் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் சிவராஜ்குமார் பேசும்போது, “அர்ஜுன் ஜான்யா இப்படத்தில் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளார். என்னிடம் கதை சொன்ன போது எல்லா கேரக்டரையும் நடித்தே காட்டிவிட்டார். இப்போது இயக்குநராகி இருக்கிறார். விரைவில் நடிகராக ஆகிவிடுவார். உபேந்திராவுக்கு நான் வாய்ப்பு தரவில்லை, அவர் தான் எனக்கு பிரேக் தந்தார். அவர் அட்டகாசமான கலைஞர். ராஜ் பி ஷெட்டி சமீபமாகக் கலக்கி வருகிறார். அவர் நல்ல இயக்குநர், நல்ல எழுத்தாளர். எங்கள் மூன்று பேர் கெமிஸ்ட்ரியும்…
ஆசிய இளைஞர் பாரா விளையாட்டுப் போட்டி கடந்த 7-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை துபாயில் நடைபெற்றது. இதில் டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பேபி சஹானா ரவி, நிதிஷ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை வென்றிருந்தனர். பேபி சஹானா ரவி 23 வயதுக்குட்பட்ட மகளிர் ஒற்றையர் கிளாஸ் 9 பிரிவில் பிலிப்பைன்சை சேர்ந்த மங்கின்சே லெனி மேரியை 6-11, 11-5, 11-8, 11-3 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தையும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். நிதிஷ் 23 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான ஒற்றையர் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் மயிலாப்பூர் விளையாட்டு அறக்கட்டளை சார்பில் நேற்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் இந்திய டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் சரத் கமல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேபி சஹானா, நிதிஷ் ஆகியோரை பாராட்டினார். பயிற்சியாளர்கள்…
ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 187 காலிப் பணியிடங்கள் ஏற்பட்டன. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த 16-ம் தேதி சம்பல்பூரில் நடைபெற்றது. இதில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் தேர்வு அறைக்கு பதிலாக விமான ஓடுதளத்தில் வரிசையாக அமர வைக்கப்பட்டிருந்தனர். தரையில் அமர்ந்தபடியே அனைவரும் தேர்வை எழுதி முடித்தனர். தேர்வர்கள் வெட்ட வெளியில் தேர்வு எழுதும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பேசுபொருளாகியது. மேலும் 5-ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே தகுதியாகக் கொண்ட இந்தப் பணிக்கு தினசரி படியாக ரூ.639 வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தேர்வில் எம்பிஏ, எம்சிஏ என முதுநிலை பட்டம் பெற்றவர்களும் பங்கேற்றனர். இது வேலையின்மையின் தீவிரத்தை காட்டுவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஃபிபா தரவரிசையில் 2025-ம் ஆண்டை ஸ்பெயின் அணி முதலிடத்துடன் நிறைவு செய்துள்ளது. 2025-ம் ஆண்டு நிறைவையொட்டி ஆடவர் கால்பந்து அணிகளின் தரவரிசை பட்டியலை ஃபிபா வெளியிட்டுள்ளது. முதல் 10 இடங்களில் எந்தவித மாற்றம் இல்லை. ஸ்பெயின் அணி 1877.18 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது. அர்ஜெண்டினா (1873.33), பிரான்ஸ் (1870), இங்கிலாந்து (1834.12), பிரேசில் (1760.46), போர்ச்சுகல் (1760.38), நெதர்லாந்து (1756.27), பெல்ஜியம் (1730.71), ஜெர்மனி (1724.15), குரோஷியா (1716.88) ஆகிய அணிகள் முறையே 2 முதல் 10-வது இடங்களில் உள்ளன. இந்தியா 1079.52 புள்ளிகளுடன் 142-வது இடத்தில் உள்ளது. அடுத்த தரவரிசை பட்டியலில் வரும் ஜனவரி 19-ம் தேதி வெளியிடப்படும் எனவும் ஃபிபா தெரிவித்துள்ளது.