Close Menu
    What's Hot

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»முல்லைக்காடு கப்பல் கட்டும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்!. பிரேமலதா விஜயகாந்த்!
    தமிழ்நாடு

    முல்லைக்காடு கப்பல் கட்டும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்!. பிரேமலதா விஜயகாந்த்!

    Editor web3By Editor web3February 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Premalatha Vijayakant
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முல்லைக்காடு கப்பல் கட்டும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கோவளம், பசுவந்தரை, தன்பாடு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் வகையில் முல்லைக்காடு பகுதியில் கப்பல் கட்டும் தளம் (Shipyard) அமைக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

    முல்லைக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல தலைமுறைகளாக பாரம்பரியமாக நடைபெற்று வரும் உப்பு உற்பத்தித் தொழில், அப்பகுதி மக்களின் முக்கியமான மற்றும் ஒரே வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், அங்குள்ள உப்பளங்கள் அழிக்கப்படும் அபாயம் உருவாகி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை ஏற்படும்.

    பாரம்பரிய தொழில்களை பாதுகாப்பதும், தொழிலாளர்களின் உரிமைகளை காப்பதும் அரசின் அடிப்படை கடமையாகும். எனவே, முல்லைக்காடு பகுதியில் கப்பல் கட்டும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் வலியுறுத்துகிறோம்.

    மேலும், அப்பகுதி மக்கள், சிறு உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர் சங்கங்கள் ஆகியோருடன் அரசு கலந்தாலோசனை நடத்தி, மக்களின் கருத்தை மதிக்கும் ஜனநாயக அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்.

    தொடர்ந்து உப்பு விலை கடும் வீழ்ச்சி அடைந்து வரும் இந்த நாட்களில், உப்பு உற்பத்தியாளர்களை நம்பி பல லட்சம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. எனவே, இதை கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக தேமுதிக சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleIND vs PAK T20| இந்தியா வெற்றிபெற நாடு முழுவதும் ரசிகர்கள் வழிபாடு!. 
    Next Article 5.50 லட்சம் பேருக்கு அரசு வேலை என்ன ஆச்சு?. இளைஞர்களுக்கு செய்த துரோகம்!. அன்புமணி விமர்சனம்!
    Editor web3
    • Website

    Related Posts

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    May 30, 2026

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    May 30, 2026

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு அதிரடி

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.