சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்க சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் கூலி. ஆகஸ்ட் 14-ந் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.
அனிருத் இசையில் சிக்கிடு சிக்கா என்று தொடங்கும் இந்த பாடலை அறிவு எழுதி உள்ளார். டி.ராஜேந்தர், அனிருத், அறிவு ஆகியோர் பாடியுள்ளனர்.
கூலி படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது ரஜினியை எப்போதும் திரையில் பார்ப்போம் என்பதுதான். ரஜினி ரசிகர்கள் அல்லாதவர்களுக்கும் கூட இந்த எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும்.
அந்தவகையில் சிக்கிடு சிக்கா பாடலின் வீடியோவை பார்த்தவர்களுக்கு ஏமாற்றமும், எரிச்சலும் தான் மிஞ்சியது. பெரிய அளவுக்கான ஒரு ஓபனிங் சாங்குக்கான பெப் என்பதே இல்லாமல் சமதளமான நடையில் பாடலின் இசை அமைக்கப்பட்டிருந்தது முதல் ஏமாற்றம்.
எப்போது பார்த்தாலும் அனிருத்தின் குரலில் ரஜினியின் பாடல் ஒலிப்பது ரொம்பவே எரிச்சலாக இருக்கிறது. மலேஷியா வாசுதேவன், எஸ்பிபி, ஓரளவு சங்கர் மகாதேவன் என கேட்டுவிட்டு அனிருத் குரல் ரஜினிக்கு ஒட்டவே மாட்டேன் என்கிறது. ஆனாலும் உறவினர் என்பதால் ரஜினி, அனிருத்தையே பிடித்துக் கொண்டு அழுகிறார். ரொம்ப மட்டமா இருக்கிறது.
போதாக்குறைக்கு 4 நிமிடங்கள் 17 நொடிகள் ஓடக்கூடிய பாடலை வெளியிட்டு இருக்கிறார்கள். இதில் 4 நிமிடமும் ரஜினியையே கூட காட்டியிருக்க வேண்டாம். ஆனால் வெறும் 10 நொடிகள் மட்டுமே காட்டிவிட்டு எஞ்சிய 4 நிமிடமும் ரஜினி போலேவே அனிருத்தை ஆடவிட்டு நம்மை சோதிக்கிறார்கள். நாங்க ரஜினிய பாக்க வந்தோமா, இல்ல அந்த பாழாய்போன அனிருத்தை பார்க்க வந்தோமா- ஏன்டா சோதிக்கிறீங்க என்பது போலாகி விட்டது.
டன்டணக்கா என்றாலே தமிழ் திரையுலகில் டி.ராஜேந்தர் என்றாகி விட்டது. குறைந்தபட்சம் அவரையாவது இந்த பாடலை முழுமையாக பாட வைத்து இருக்கலாம். அவரையும் வெறுமனே தின்தின்கா என்று கத்த வைத்துள்ளார்கள். மனசாட்சி இருக்காடா? அவர் எப்பேர்பட்ட பாடகர், எவ்வளவு ஹிட் சாங்ஸ் கொடுத்து இருக்காரு.. அவரையாடா இப்படி பண்ணி வச்சி இருக்கீங்க..
கடைசியில் சாண்டி மாஸ்டர் வேற வந்து டான்ஸ் ஆடுறேனு ரஜினி ஸ்டெப் போட்டு உயிரை வாங்குறார். ரஜினி நேரடியா ஸ்டெப்ஸ் போட்றத தாண்டா பார்க்க வந்து இருக்கோம். ரஜினி போல நீங்க ஸ்டெப்ஸ் போட்றத இல்ல.. என்ன கொடுமை சரவணன்..
மொத்தத்தில் கூலியின் முதல் சிங்கள், நம்மள கொல்றாங்க எசமான் கொல்றாங்க..