Close Menu
    What's Hot

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»ஹார்ட்பீட்’ வெப் தொடரில் டாக்டராக நடித்த நடிகை தீபா பாலு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்!
    சினிமா

    ஹார்ட்பீட்’ வெப் தொடரில் டாக்டராக நடித்த நடிகை தீபா பாலு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்!

    Editor TN TalksBy Editor TN TalksJune 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Heart Beat Season 2 JioHots
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கலைக்கு பெயர் பெற்ற தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கலை மற்றும் திரைத்துறைக்கு பல திறமைகள் அறிமுகமாகியுள்ளனர். அந்த வகையில், தஞ்சாவூர், பட்டுக்கோட்டையை சேர்ந்த தீபா பாலு திரைத்துறைக்கு தவிர்க்க முடியாத அறிமுகம். ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட்பீட்’ வெப்தொடரில் டாக்டர் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

    கல்லூரியில் தீபா படித்துக் கொண்டிருந்தபோது, நாக்கவுட் யூடியூப் சேனலில் அவர் நடித்த ‘தேன்மிட்டாய்’ சீரிஸ் அனைவரையும் ரசிக்க வைத்தது. கோவிட் காலக்கட்டத்தில் ஹிட் ஆன இந்த சீரிஸ் மூலம் அவருக்கு ரசிகர்கள் உருவானதுடன் திரைத்துறையினர் கவனத்தையும் தீபா கவர்ந்தார். ஹாட்ஸ்டார் வெப்சீரிஸூக்காக எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் ஷியாம் தீபாவை தொடர்பு கொண்டதுதான் அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த கதாபாத்திரத்தை அவரோடு தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்ததால் எந்தவித தயக்கமும் இல்லாமல் உடனே ஒத்துக் கொண்டார். முதல் நாள் மிகவும் நம்பிக்கையுடன் அந்த கதாபாத்திரத்தை நடித்துக் கொடுத்தார். படக்குழு அவரது நடிப்பை பாராட்டி உத்வேகம் கொடுக்க அந்த கதாபாத்திரத்திற்காக தனது முழு உழைப்பையும் கொடுத்து நடித்தார்.

    தற்போது ‘ஹார்ட்பீட் சீசன்1’ வெளியாகியிருக்கும் நிலையில் ரசிகர்கள் அவருடைய ஆன்- ஸ்கிரீன் கதாபாத்திர பெயரான ‘ரீனா ட்யூட்’ என்றே செல்லமாக அழைத்து வருகின்றனர். பொது இடங்களிலும் அவரை அடையாளம் கண்டு வருகின்றனர். நிஜத்திலும் தீபா MBBS படித்திருக்கிறார் என்பது ஆச்சரியமான தகவல். ஒருமுறை விமானநிலையத்தில் மருத்துவ உதவி அவசரமாக தேவைப்பட்டபோது தீபாவை அடையாளம் கண்ட ரசிகர் ஒருவர் அவரை நாடியிருக்கிறார். அப்போது வேறொருவர் இவர் நடிகை மட்டுமே என்று சொல்ல அதற்கு தீபா, “நான் திரையில் மட்டும் டாக்டர் இல்லை. நிஜத்திலும் தான்” என்று பொறுமையுடன் எடுத்துக் கூறி, உடனே மருத்துவ முதலுதவியும் செய்திருக்கிறார்.

    தமிழ் சினிமா கதாநாயகிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வலுவான கதாபாத்திரங்களைக் கொடுத்து வருகிறது. அந்த வகையில், நடிகைகள் ரேவதி, நதியா, ஜோதிகா மற்றும் சாய்பல்லவி ஆகியோர் தனக்கு இன்ஸ்பிரேஷன் என்கிறார் தீபா பாலு.

    தீபாவின் வலுவான நடிப்பும் கதாபாத்திரங்கள் தேர்வும் பல இயக்குநர்களைக் கவர்ந்துள்ளது. தன் நடிப்புத் திறமையை நிரூபிக்கும் வகையிலான கதாபாத்திரம் வரும்போது முழு அர்ப்பணிப்புடன் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் சொல்கிறார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article11 அணைகளை தூர்வார நீதிமன்றம் உத்தரவு..
    Next Article குஜராத்தில் ஏர் இந்தியா விமானம் கோர விபத்து.. 242 பயணிகள் நிலைமை கேள்விக்குறி…
    Editor TN Talks

    Related Posts

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    April 11, 2026

    திருட்டுத்தனமாக பார்க்காதீங்க!. ஜனநாயகன் லீக் விவகாரத்தில் சிவகார்த்திகேயன் கருத்து!

    April 10, 2026

    ஜன நாயகன் படத்தை டவுன்லோட் செய்யாதீங்க!. படக்குழுவினர் கடும் எச்சரிக்கை!

    April 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    Trending Posts

    அடுத்த அதிரடி!. தலைமைச் செயலர், உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    April 11, 2026

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    April 11, 2026

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    April 11, 2026

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.