பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் புகைப்படங்களை அனுமதியின்றி யாரும் பயன்படுத்தக்கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

90களில் உலக அழகி பட்டம் பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழ், இந்தி, மராத்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். இந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராயின் பெயரில் போலியாக இணையதளம் தொடங்கப்பட்டதாக செய்தி வெளியானது. மேலும் ஐஸ்வர்யா ராய்க்கு விவாகரத்து, அவர் நடிக்கும் திரைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை தகவல்கள் வைரலாகி வருகிறது.

இந்த சூழலில் தனது புகைப்படத்தை அனுமதியின்றி யாரும் பயன்படுத்த வேண்டாம் என கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் மனு தாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணையில், சமூக வலைத்தளங்கள் தனது பெயரைப் பயன்படுத்தி பொருட்களை விற்பனை செய்வதாகவும், ஏஐ மூலம் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படைங்கள் பகிரப்படுவதாகவும், டி சர்ட், பாத்திரங்களில் தனது புகைப்படங்களை பயன்படுத்துவதாகவும்  முறையிடப்பட்டது.

மேலும், இணையதளங்களில் அதிகளவில் தனது பெயரில் போலியான விளம்பரங்கள் பகிரப்படுவதாகவும் ஐஸ்வர்யா தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் ஆன்லைன் வலைதளங்களில்  வணிக ஆதாயத்திற்காக ஐஸ்வர்யா ராயின் பெயர் மற்றும் படங்களை  பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டனர்.

பிரபலமானவர்களின் ஒப்புதல்  இன்றி அவர்களின் பெயர் மற்றும் படங்களை பயன்படுத்தப்படும்போது, ​​அது சம்பந்தப்பட்டவருக்கு வணிக ரீதியாக தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல் , அவர்கள் கண்ணியத்துடன் வாழும் உரிமையையும் பாதிப்பதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version