நயன்தாரா மற்றும் கவின் இணைந்து நடிக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல், வளர்ந்து வரும் இளம் ஹீரோவாக திகழும் கவினின், சமீபத்தில் வெளியான ‘கிஸ்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், நயன்தாரா மற்றும் கவின் இருவரது நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை விஷ்ணு எடவன் இயக்கி வருகிறார். ஜென் மார்டின் இசையமைப்பாளராகவும், பிலோமின்ராஜ் படத் தொகுப்பாளராகவும், ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. படத்தின் கேப்சனில் “அனைத்து உரையாடல்களும் சின்னதாக, சிம்பிளாக Hi 🙂 ல் இருந்துதான் ஆரம்பிக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version