இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கனிமா பாடலுக்கு குடும்பத்துடன் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் சில காலம் இயக்கத்தில் இருந்து விலகி இருந்தார். படங்கள் தயாரிப்பதில் கவனமும் செலுத்தி வந்தார். தமிழை தாண்டி ஹிந்தி சினிமாவிற்கும் சென்று படங்களை இயக்கி வந்தவர், தற்போது சிவகார்த்திகேயனின் மதராஸி என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனிரூத் இசையமைத்துள்ள இப்படத்தை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துள்ளனர். இந்த நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கனிமா பாடலுக்கு குடும்பத்துடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார்.
தனது மகளின் பூப்புனித நீராட்டு விழா பிரம்மாண்டமாக நடந்துள்ளது. இதில் தனது மகள், மகன், மனைவி ஆகியோருடன் இணைந்து சூர்யாவின் ரெட்ரோ படத்தில் இடம்பெற்றிருந்த கனிமா பாடலுக்கு அதே நடன அசைவுகளுடன் நடனடமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.