ஜூலை 10-ம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த ‘பிரீடம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தள்ளி போயுள்ளது.
சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அண்மையில் வெளியான டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ளது ‘பிரீடம்’ திரைப்படம். சத்யசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார்.
ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இப்படம், தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச் சாலையில் சிக்கிக் கொண்ட இருவர் தப்பித்து செல்வது போன்ற கதைக் களத்தில் அமைந்துள்ளது. இத்திரைப்படம் கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஒரு சில காரணங்களால் அறிவித்த தேதியில் அப்படம் வெளியாகவில்லை. இது குறித்து பல கேள்விகள் எழுந்த நிலையில், படக்குழு தற்போது அதுபற்றின அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது பிரீடம் படம் எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான விஜய கணபதி பிக்சர்ஸ் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.