ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தவெக தலைவர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ம் தேதி பொங்கலை ஒட்டி ரிலீசாக இருந்தது. ஆனால் இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரொடெக்ஷன் வழக்கு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஜனநாயகன் படத்தை மறு ஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரியத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்தது.
இதனால் குறிப்பிட்ட நாளில் ஜனநாயகன் ரிலீசாவது தள்ளிப் போனது. இந்த சூழலில் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ்கோரி உச்சநீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வந்தது. அப்போது, ஜனநாயகன் தணிக்கை தொடர்பான மனுவை விசாரிக்க விருப்பம் இல்லை என்ற நீதிபதிகள், உயர்நீதிமன்றத்தையே அணுகுமாறு கூறி தள்ளுபடி செய்தது.
மேலு, ஜனநாயகன் தொடர்பான மனுவை ஜனவரி 20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஜனநாயகன் விரைவில் ரிலீசாகும் என நினைத்த ரசிகர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு அதிர்ச்சியை அளித்துள்ளது.
