Close Menu
    What's Hot

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»பிரபல கன்னட நடிகர் உமேஷ் காலமானார்.. உயிரை பறித்தது கல்லீரல் புற்றுநோய்
    சினிமா

    பிரபல கன்னட நடிகர் உமேஷ் காலமானார்.. உயிரை பறித்தது கல்லீரல் புற்றுநோய்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    actor died
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கன்னட திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் உமேஷ் காலமானார். அவருக்கு வயது 80.

    கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    ஐம்பது ஆண்டுகால திரைப் பயணத்தில், 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, கன்னட சினிமாவில், தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் உமேஷ். 1960-ஆம் ஆண்டு வெளியான பி.ஆர்.பந்துலு இயக்கிய ‘மக்களா ராஜ்யா’ படத்தில் அறிமுகமான உமேஷ், தனது அசாத்தியமான நகைச்சுவை திறன், தனித்துவமான உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்புக்காக கன்னட ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டார்.

    1975-ஆம் ஆண்டில் வெளியான ‘கதா சங்கமா’ திரைப்படத்திற்காகச் சிறந்த துணை நடிகருக்கான கர்நாடக மாநில விருது இவருக்கு வழங்கப்பட்டது. நகரா ஹோல், குரு சிஷ்யரு, அனுபமா, கமனா பில்லு, அபூர்வ சங்கமா, ஸ்ருதி செரிதாகா, ஷ்ரவண பந்து, மலாயா மருதா உள்ளிட்ட படங்களில் இவரது நகைச்சுவை காட்சிகள் பிரபலம்.

    உடல்நலக்குறைவால் தீவிர சிகிச்சை பெற்று வந்தபோதும், மருத்துவமனை படுக்கையில் இருந்தபடியே உமேஷ் நகைச்சுவையாக பேசியும் பாடியும் உடன் இருந்தவர்களையும் கலகலக்க வைத்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகின.

    கடந்த அக்டோபர் மாதம், உமேஷ் தனது வீட்டில் உள்ள குளியலறையில் வழுக்கி விழுந்ததால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆரம்பத்தில் கை மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    ஆனால் ஸ்கேன் பரிசோதனையில், அவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உமேஷ் வெளித்தோற்றத்தில் உடல் ரீதியாக வலிமையாகக் காணப்பட்டாலும், புற்றுநோய் கண்டறியப்பட்ட நேரத்தில் அது மற்ற உறுப்புகளுக்கும் பரவியிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் கன்னட சினிமா ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவேலையை காட்டியது டிட்வா புயல்… தமிழகத்தில் இதுவரை 3 பேர் பலி
    Next Article ‘பராசக்​தி’ திரைப்பட டப்​பிங் பணியைத் தொடங்கினார் சிவ​கார்த்​தி​கேயன்
    Editor TN Talks

    Related Posts

    பராசக்தி பட ரிலீஸுக்கு தடை விதிக்க முடியாது: ஐகோர்ட்

    December 26, 2025

    மிடில் கிளாஸ்’ முதல் ‘ரிவால்வர் ரீட்டா’ வரை.. இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள் ரிலீஸ்!

    December 26, 2025

    “எனக்கு இது One Last Chance” – ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா குறித்து அனிருத்

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    அதிமுகவில் டிச.31 வரை விருப்ப மனு அளிக்கலாம்! இபிஎஸ் அறிவிப்பு

    தேர்தல் நேரத்தில் கோயில், பக்தி ! திருமா. மீது குஷ்பு தாக்கு

    Trending Posts

    வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் துணை நிற்கும்; முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடா? ஜெயக்குமார் சொன்ன பதில் இதுதான்

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025

    இந்தியாவிலேயே தமிழகம் தனிகாட்டு ராஜா: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

    December 26, 2025

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.