நடிகர் அர்ஜூனின் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார் கே.ஜி.எஃப் இசையமைப்பாளர் ரவி பசூர்.

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக நடித்து வருபவர் ஆக்சன் கிங் அர்ஜூன். இன்றும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில், ஹீரோவாகவும், வில்லனாகவும், குணசித்திர நடிகராகவும் நடித்து வருகிறார் அர்ஜூன்.

இவர் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநரான சுபாஷ் கே.ராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், அப்பா-மகளுக்கு இடையே நடக்கும் கதையாக இப்படம் உருவாகவுள்ளது.

இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்ற நிலையில், இப்படத்தின் மூலம் கே.ஜி.எஃப் படத்தின் இசையமைப்பாளர் ரவி பசூர் தமிழில் அறிமுகமாகிறார்.

Share.
Leave A Reply

Exit mobile version