பிரதீப் ரங்கநாதன் கீர்த்தி ஷெட்டி மற்றும் கௌரி கிஷன் ஆகியோர் நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்கிற திரைப்படம் வருகிற டிசம்பர் 18ம் தேதி வெளியாகிறது. இது சம்பந்தமான ப்ரமோஷன் வேலைகளில் படக்குழு பிஸியாக இருக்கிறது.
இது சம்பந்தமாக சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் நடிகை கீர்த்தி ஷெட்டி இத்திரைப்படம் குறித்தும் உடன் நடடித்த நடிகர்கள் குறித்தும் நிறைய பேசியிருக்கிறார். அதில் கௌரி கிஷன் குறித்து அவர் பேசியது,
“படப்பிடிப்பு தளத்தில் நானும் கௌரி கிஷன் அவர்களும் நல்ல நண்பர்கள். சமீபத்தில் நடந்த சர்ச்சை ஒன்றில் அவர் மிக தைரியமாக பேசி தவறாக கேள்வி கேட்ட நிருபரின் வாயை அடைத்தார். நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் அவ்வாறு செய்திருப்பேனா என்று தெரியாது.

நிறைய பேருக்கு இது மாதிரியான சூழ்நிலை நிகழும் ஆனால் அந்த இடத்தில் என்ன செய்வது என்று நிறைய பேருக்கு தெரியாது. ஆனால் அந்த இடத்தில் அவர் மிகத் துணிச்சலுடன் அந்த விஷயத்தை கையாண்டு விதம் எனக்கு மிகவும் பிடித்தது. நான் அவரிடம் தொலைபேசியில் அழைத்து அது சம்பந்தமாக அவரை நான் பாராட்டினேன். அவர் தன் ஒருவருக்காக மட்டும் இதைப் பற்றி பேசவில்லை எங்கள் எல்லோருக்காகவும் பேசியிருக்கிறார்”, என்று கீர்த்தி ஷெட்டி கூறியுள்ளார்.
Others மூவி திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடந்த சம்பவம் :
அபின் ஹரிஹரன் இயக்கத்தில் ஆதித்யா மாதவன், கௌரி கிஷன் மற்றும் அஞ்சு குரியன் ஆகியோர் நடிப்பில் கடந்த நவம்பர் 7ம் தேதி அதர்ஸ் என்கிற திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பு நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், youtube-ஐ சேர்ந்த ஒருவர் நடிகை கௌரி கிஷனை பற்றி கேட்ட கேள்வி அனைவரையும் முகம் சுழிக்க வைக்கும் விதத்தில் இருந்தது.
முதலில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ஆதித்யாவிடம் அந்த நிருபர், “நீங்கள் ஹீரோயினை தூக்கிக்கொண்டு நடித்திருக்கிறீர்கள் ஹீரோயின் வெயிட் எவ்வளவு இருந்தது என்று கேட்டார். அதற்கு ஹீரோ அவ்வளவு வெயிட் ஒன்றும் இல்லை நான் நிறைய ஒர்க் அவுட் செய்கிறேன் நிறைய பளுதூக்குகிறேன் என்று சிம்பிளாக கூறி முடித்து விட்டார்.
பின்னர் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதே நிருபர் இயக்குனரிடம், “படத்தில் ஹீரோ போலீஸ் கதாபாத்திரத்தில் நல்ல வாட்ட சட்டமாக இருக்கிறார். ஹீரோவுக்கு ஏற்ற விதத்தில் ஜோடி பொருத்தம் சரியாக இருந்ததா என்று கேட்டார். அதற்கு இயக்குனர் ஒருவருது ஹைட் வெயிட் பார்த்து காதல் வருவதில்லை நான் இதில் நம்பிக்கை கொள்பவன் இல்லை என்று கூறினார். அதற்கு அந்த நிருபர் பிறகு என்ன ஏன் ஹீரோயினுக்கு பிடிக்காமல் போனது என்று கேட்டார்.
பின்னர் பேசிய கௌரி கிஷன், “நீங்கள்தான் அன்று எடை சம்பந்தமாக கேள்வி கேட்டதா. முதலில் இவ்வாறு எடை சம்பந்தமான கேள்வி கேட்பது தவறு. இவ்வாறு மரியாதை குறைவான கேள்வியை கேட்காதீர்கள். என்னுடைய எடை என்ன என்று தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்.

நான் எனது திறமையை மட்டுமே நம்பி இருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உடலமைப்பு உண்டு. இன்னொரு முறை இந்த மாதிரி யாரிடமும் உடல் எடை சம்பந்தமான மரியாதை குறைவான கேள்வியை கேட்காதீர்கள் என்று துணிச்சியுடன் பேசி இருக்கிறார்.
