Close Menu
    What's Hot

    தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு!. இலங்கை கடற்படை அட்டுழியம்!

    சுட்டெரிக்கும் சூரியன்!. இயல்பை விட 3 டிகிரி வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு!.

    திமுகவின் மோசமான நிர்வாகம் அம்பலமாகி வருகிறது!. பிரதமர் மோடி அட்டாக்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»அஜித்துடன் கைக்கோர்க்கும் இயக்குநர் லோகேஷ்… அவரே சொன்ன அப்டேட்…
    சினிமா

    அஜித்துடன் கைக்கோர்க்கும் இயக்குநர் லோகேஷ்… அவரே சொன்ன அப்டேட்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    10 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விரைவில் அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தெரிவித்துளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ், மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்து வருகிறார் லோகேஷ். அந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து கூலி படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

    அனிரூத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்துடன், அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் ஃபாசில் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ளது.

    சமீபத்தில் இப்படத்தின் சிக்கிடு, மோனிகா, பவர் ஹவுஸ் போன்ற பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஆகஸ்ட் 2-ம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த லோகேஷ் கனகராஜ்,

    “அஜித் சார் நடிப்பில் கண்டிப்பாக திரைப்படம் இயக்குவேன். இது 100 சதவீதம் உறுதி. அவரது ஆக்சன் முகத்தை என்னுடைய படத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை உள்ளது. சுரேஷ் சந்திரா மூலமாக சில மாதங்களுக்கு முன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. அவர் கார் ரேஸிலும் நான் என் அடுத்தடுத்த படங்களிலும் பிசியாக இருப்பதால் கொஞ்சம் தள்ளிப்போகிறது. ஆனால், நிச்சயமாக நடக்கும். எனக்கும் அவருக்கும் ஒரு டைம்லைன் வரும் பொழுது கண்டிப்பாக படத்தை இயக்குவேன். அவரை இயக்குவது என் ஆசைகளில் ஒன்று” என கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதல்வருக்கு 6-வது நாளாக சிகிச்சை… மருத்துவமனையில் இருந்த படியே அரசுப்பணி…
    Next Article கூகுள் மேப்-ஆல் பள்ளத்தில் காரோடு பாய்ந்த பெண்… மகாராஷ்டிராவில் நடந்த சோகம்…
    Editor TN Talks

    Related Posts

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    April 11, 2026

    திருட்டுத்தனமாக பார்க்காதீங்க!. ஜனநாயகன் லீக் விவகாரத்தில் சிவகார்த்திகேயன் கருத்து!

    April 10, 2026

    ஜன நாயகன் படத்தை டவுன்லோட் செய்யாதீங்க!. படக்குழுவினர் கடும் எச்சரிக்கை!

    April 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு!. இலங்கை கடற்படை அட்டுழியம்!

    சுட்டெரிக்கும் சூரியன்!. இயல்பை விட 3 டிகிரி வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு!.

    திமுகவின் மோசமான நிர்வாகம் அம்பலமாகி வருகிறது!. பிரதமர் மோடி அட்டாக்!

    தறி நெய்த முதல்வர் ஸ்டாலின்!. நெசவாளர் குடும்பத்துடன் உரையாடி வாக்கு சேகரிப்பு!.

    4-வது முறையாக சஞ்சுவின் ‘ஓப்பனிங்’ செஞ்சுரி!. ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!

    Trending Posts

    தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு!. இலங்கை கடற்படை அட்டுழியம்!

    April 12, 2026

    சுட்டெரிக்கும் சூரியன்!. இயல்பை விட 3 டிகிரி வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு!.

    April 12, 2026

    திமுகவின் மோசமான நிர்வாகம் அம்பலமாகி வருகிறது!. பிரதமர் மோடி அட்டாக்!

    April 12, 2026

    தறி நெய்த முதல்வர் ஸ்டாலின்!. நெசவாளர் குடும்பத்துடன் உரையாடி வாக்கு சேகரிப்பு!.

    April 12, 2026

    4-வது முறையாக சஞ்சுவின் ‘ஓப்பனிங்’ செஞ்சுரி!. ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!

    April 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.