டெல்லியில் 71வது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
ஒவ்வொரு ஆண்டு மத்திய அரசால் திரை கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர் என பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி 71வது தேசிய திரைப்பட விருதை டெல்லியில் உள்ள விக்யான் பவனில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். இதில் சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக்கான் மற்றும் விக்ராந்த் மாஸே பெற்றனர். ஜவான் படத்தில் நடித்ததற்காக ஷாருக்கானுக்கும், 12 பெயில் படத்துக்காக விக்ராந்த் மாஸேவுக்கும் விருது வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருது ராணி முகர்ஜிக்கு வழங்கப்பட்டது. மிசஸ் சட்டர்ஜி வெர்சஸ் நார்வே படத்துக்காக ராணி முகர்ஜி விருது பெற்றார்.
சிறந்த துணை நடிகருக்கான விருது எம்.எஸ். பாஸ்கர், திரைக்கதை ஆசிரியருக்கான விருதை பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணான் பெற்றனர். வாத்தி படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஜிவி பிரகாஷ் பெற்றார். சிறந்த தமிழ் படத்துக்கான விருது பார்க்கிங் படத்தின் தயாரிப்பாளர் கே.எஸ்.சினிஷ்க்கு வழங்கப்பட்டது.
இந்த வரிசையில் “தாதா சாகேப் பால்கே விருது” மோகன்லாலுக்கு வழங்கப்பட்டது.