பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் மற்றும் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதன்முறையாக இணையும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் தொடக்க விழா மற்றும் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது. ‘வாரிசு’ திரைப்படத்தை இயக்கிய வம்சி பைடிபள்ளி இப்படத்தை இயக்குகிறார், பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படம், பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
https://x.com/SVC_official/status/2046870612963127692?
ஷாரூக் கானின் ‘ஜவான்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு நயன்தாரா நடிக்கும் இரண்டாவது நேரடி பாலிவுட் படம் இதுவாகும். சமீபத்தில் நடிகர் மாதவனுடன் ‘டெஸ்ட்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நயன்தாரா, தற்போது சல்மான் கானுடன் ஜோடி சேருவதன் மூலம் மீண்டும் பாலிவுட்டில் தனது முத்திரையை பதிக்கத் தயாராகிவிட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ள நிலையில், நயன் – சல்மான் கூட்டணியின் ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
