விஜய்சேதுபதி, நித்யாமேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைவன் தலைவி’ படத்திலிருந்து புது புது தகவல்கள் வெளியாகி கொண்டே வருகிறது.
நடிகர் விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அவரது நடிப்பில் வெளியான ‘ஏஸ்’ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அவரது அடுத்த வெற்றிக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யாமேனன் ஆகியோர் நடிப்பில் உருவானது ’தலைவன் தலைவி’ திரைப்படம்.
விஜய் சேதுபதியின் 52வது படமாக உருவாகியுள்ள இப்படத்தில் யோகி பாபு, பாபா பாஸ்கர் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குடும்ப பின்னணியைக் கதையாக வைத்து உருவாகியுள்ள இப்படம் 25-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திலிருந்து வெளியான கிளிம்ஸ் வீடியோ, பாடல்கள் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
அதேப் போல் இப்படத்தின் டிரெய்லர் 17.07.2025 தேதி வெளியாகி டிரெண்ட் ஆனது. இந்த நிலையில் நடிகை நித்யா மேனன் தலைவன் தலைவி படத்திற்காக டப்பிங் பேசிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அதில் நித்யா மேனன் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளிலும் டப்பிங் பேசியுள்ளார்.